- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?
Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்துள்ள விஜயா, அவருக்கு சாபம் விட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவும், முத்துவும் சிந்தாமணியை சந்தித்து தங்கள் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என கூறிய நிலையில், அதற்கு அவர் முக்கிய கண்டிஷன் ஒன்றை போட்டிருக்கிறார். அது என்னவென்றால், மீனா அண்மையில் பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த நிலையில், அவர் தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், அவர் விலகினால் அவருக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு வாங்கிய தன்னை தலைவி ஆக்கிவிடுவார்கள் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal Thodargiradhu : கல்யாண வீட்டில் கலாட்டா... பார்கவியால் வெடித்த புது பிரச்சனை

சிந்தாமணி vs விஜயா
விஜயாவிடம் சிந்தாமணி தான் நம் வீட்டுக்கு சீல் வைத்தது என்கிற உண்மையை முத்து சொன்ன நிலையில், விஜயா அவசர அவசரமாக தன்னுடைய தோழி பார்வதியை அழைத்துக் கொண்டு சிந்தாமணி வீட்டுக்கு செல்கிறார். அங்கு போனதும் ஆரம்பத்தில் மாஸ்டர் என மரியாதையாக பேசிக் கொண்டிருந்த சிந்தாமணி, பின்னர் அவர் தன்னை தரக்குறைவாக பேசியதை அடுத்து போடி, வாடி என பேசத் தொடங்குகிறார். அதைப்பார்த்த பார்வதி, இதுதான் இவளுடைய உண்மையான முகம், இத்தனை நாள் உன்கிட்ட அன்பாக இருப்பது போல் நடித்திருக்கிறாள் என சொல்கிறார்.
சாபம் விட்ட விஜயா
தன்னுடைய குடும்பத்தையே அவமானப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன் என கூறும் விஜயா, அவருக்கு சாபமும் விட்டிருக்கிறார். இப்படி அநியாய வட்டி வாங்கி நீ காசு சேர்த்து வைப்பதெல்லாம் உன் பொண்ணுக்கு தான, நீ வேணா பாரு உன் பொண்ணு எவனாச்சும் இல்லாத வீட்டு பையனை கூட்டிட்டு ஓட தான் போறா என சொல்கிறார். அதைக்கேட்டதும் கடுப்பாகும் சிந்தாமணி, விஜயாவிடம் வாய மூடு என எச்சரிக்கிறார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்ள, அங்கிருந்து கிளம்பி செல்கிறார் விஜயா.
ரவிக்கு மாமனார் போட்ட கண்டிஷன்
மறுபுறம் ரவி, ஸ்ருதியிடம் தன்னால் வீட்டை மீட்க எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க, அப்போது ஸ்ருதியின் அம்மா அவர்கள் இருவரையும் கீழே வருமாறு அழைக்கிறார். அங்கு சென்றபின்னர் ஸ்ருதியின் தந்தை, ரவியிடம் நீங்க இப்படி கஷ்டப்படுறது எனக்கு புடிக்கல, அதனால நான் உங்கள் வீட்டை மீட்க ஒரு 10 லட்சம் ரூபாய் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். நான் 10 லட்சம் கொடுத்தால் நீங்கள் இனிமேல் என் மகளோடு இந்த வீட்டில் தான் வாழ வேண்டும் என கூறுகிறார். என்ன அங்கிள் என்னை விலைக்கு வாங்க பாக்குறீங்களா, அதெல்லாம் முடியாது என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்றுவிடுகிறார் ரவி.
ஸ்ருதி கொடுக்கும் ஐடியா
பின்னர் ரவியை சந்தித்து பேசும் ஸ்ருதி, அப்பாகிட்ட பணம் வாங்கிக்கலாம். அந்த பணத்தை திருப்பி கொடுக்கும் வரை நாம இங்க இருக்கலாம். கொடுத்த பின்னர் உங்க வீட்டுக்கு போயிடலாம் என கூறுகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கும் ரவி, நேராக கிளம்பி மீனா அம்மா வீட்டுக்கு செல்கிறார். அங்கு ரவி சோகமாக வந்ததை பார்த்த விஜயா, என்னடா ஆச்சு என கேட்க, அவர் ஸ்ருதி அப்பா 10 லட்சம் தருவதாக சொன்னதை சொல்கிறார். அதற்கு விஜயா, நல்லது தான் வாங்கிக்கோ என கூறுகிறார்.
மீனாவை சீண்டிய விஜயா
அருகில் இருந்த அண்ணாமலை, அந்த ஆளு எதுவும் உள்நோக்கம் இல்லாம இதெல்லாம் சொல்ல மாட்டானே என சொன்னதும், ரவி தன்னை வீட்டோட மாப்பிள்ளையா அவர் அழைத்த விஷயத்தை கூறுகிறார். அதற்கு ஸ்ருதி என்ன சொன்னா என முத்து கேட்க, அவ பணத்தை திருப்பி கொடுக்குற வரை நாம அங்கேயே இருக்கலாம் என சொன்னதாக சொல்கிறார். மறுபுறம் விஜயாவும், மீனாவிடம் நீ தலைவி பதவியை விட்டுக்கொடுத்தால், நம் வீட்டை மீட்கலாம் தானே, நீ ஏன் அந்த பதவியில் இருந்து விலகக்கூடாது என கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

