MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

மீனாவுக்கு சவால்விட்ட ரோகிணி.... விசாரணையில் இறங்கும் முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை சந்தித்த ரோகிணி, அவரிடம் தான் மீண்டும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன் என சவால்விடுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 06 2026, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார் விஜயா. இதனால் தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார் மீனா. அவரை சந்திக்க ஸ்ருதி, அவரின் பூக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ரோகிணியால் தான் நம் வீட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதோ என தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். அவர்கள் ரோகிணியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, ரோகிணி அங்கு காரில் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் மீனா மற்றும் ஸ்ருதியை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
ரோகிணியில் திமிர் பேச்சு
Image Credit : jiohotstar

ரோகிணியில் திமிர் பேச்சு

அங்கு சென்று மீனாவிடம், இப்போ நாம மூணு பேருமே அந்த வீட்டில் இல்லை என சொல்ல, இப்போ உனக்கு சந்தோஷமா என மீனா கேட்கிறார். கணவரை பிரிந்திருப்பதன் வலி என்பது இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஈஸியா மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்றிருக்கிறோம். ஆனால் நீ அந்த வீட்டுக்குள் செல்வது நடக்கவே நடக்காது என கூறுகிறார் ஸ்ருதி. நீங்க ரெண்டு பேரும் எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்கனா உங்களுக்கு நல்லது, இல்லையென்றால் என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.

Related Articles

Related image1
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Related image2
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
35
வீட்டில் மனோஜ் உடன் சண்டை போடும் முத்து
Image Credit : jiohotstar

வீட்டில் மனோஜ் உடன் சண்டை போடும் முத்து

மறுபுறம் வீட்டில் மருமகள்கள் யாருமே இல்லாததால், முத்து, ரவி தான் எல்லா வேலையும் செய்கிறார்கள். ரவி சமையல் வேலையை கவனித்துக் கொள்ள, முத்து வீட்டிற்கு மாப் போடுகிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், எந்த வேலையும் செய்யாமல் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் எழுந்து போய் பாத்திரம் கழுவுடா என முத்து சொல்ல, அதெல்லாம் எனக்கு தெரியாது என சொல்கிறார் மனோஜ். பின்னர் அங்கு வரும் விஜயா, மனோஜ் எந்த வேலையும் பார்க்க மாட்டான் என சொல்ல, அவனை கெடுக்குறதே நீங்க தான் என முத்துவும், ரவியும் திட்டுகிறார்கள். இதையடுத்து வீட்டு வேலைக்கு ஆள் எடுக்க முடிவு செய்கிறார்கள்.

45
விஜயாவிடம் பேசும் அண்ணாமலை
Image Credit : jiohotstar

விஜயாவிடம் பேசும் அண்ணாமலை

இதையடுத்து ரூமுக்குள் செல்லும் அண்ணாமலை, விஜயாவிடம் தனியாக பேசுகிறார். அப்போது மீனா இந்த வீட்டோட முதுகெலும்பு என கூறும் அண்ணாமலை, இனி எந்த ஜென்மத்திலும் மீனா மாதிரி ஒரு நல்ல மருமகள் உனக்கு கிடைக்க மாட்டாள் என கூறுகிறார். மீனாவை மீண்டும் இந்த வீட்டுக்கு கூப்பிடலாம் என அண்ணாமலை சொல்ல, அதை மட்டும் சொல்லாதீங்க என தடுக்கும் விஜயா, நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதனால் கடுப்பான அண்ணாமலை, நாய் வாலை எப்படியும் நிமிர்த்த முடியாது. அது வேஸ்ட் என விஜயாவை குத்திக்காட்டுகிறார்.

55
முத்துவுக்கு வந்த டவுட்
Image Credit : jiohotstar

முத்துவுக்கு வந்த டவுட்

மறுபுறம் முத்து, மீனாவின் பூக்கடைக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார். அப்போது ரோகிணி அங்கு வந்த விஷயத்தை சொல்லும் மீனா, நம் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவள் தான் காரணமாக இருக்கக் கூடும் என ஸ்ருதி சந்தேகப்படுவதாக மீனா கூற, இருக்கலாம் மீனா, பார்லர் அம்மா இந்த மாதிரி ஃபிராடு வேலைகளை எல்லாம் செய்யக்கூடிய ஆள் தான். முதலில் அந்த பெண் சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் முத்து விசாரணையில் இறங்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related Stories
Recommended image1
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image2
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved