- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
Siragadikka Aasai Serial 06 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தை ஹார்ட் அட்டாக் வந்தது போல் நடிக்க, ரேகாவும் பயந்து அவருடனே இருக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் பல திருப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளன. முத்து மற்றும் மீனா தங்களது வீட்டில் மேல்மாடி அறை கட்டும் பணியை தொடங்க முடிவு செய்கின்றனர். அப்போது, முதல் செங்கலை தானே வைத்து பூமி பூஜையை நடத்த வேண்டும் என்று விஜயா வலியுறுத்துகிறார். தனது தந்தை வீடு கட்டியபோதும் முதல் செங்கலை தான் வைத்ததாகக் கூறி, இந்த நிகழ்விலும் அதையே செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார் விஜயா.
விஜயாவின் டிராமா
ஆனால், இதற்குப் பின்னால் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக வேண்டும் என்ற நோக்கமே இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில், முத்து தனது தந்தை அண்ணாமலையிடம் வீடியோ கால் செய்து, விஜயாவின் செயல்களைப் பற்றி கூறுகிறார். மறுபுறம், விஜயா ஸ்ருதியிடம் எல்லாவற்றையும் வீடியோவாக பதிவு செய்யச் சொல்லி, பூஜை செய்வது முதல் முத்து-மீனாவை ஆசீர்வதிப்பது வரை அக்கறையுள்ளவர் போல நடித்து முடிக்கிறார். வேலை முடிந்ததும் எந்தப் பேச்சும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
ரேகா அப்பா போடும் நாடகம்
மற்றொரு பக்கம், சத்யா, ரேகாவின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தையின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்கிறார். அடுத்த நாள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதாக ரேகா கூற, அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல சத்யா முடிவு செய்கிறார். அதே நேரத்தில், ரேகாவின் தந்தை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது போல டிராமா போடுகிறார். மருத்துவமனைக்கு செல்ல மறுத்த அவர், தன் மனைவி சிந்தாமணி கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்டதும் உடல்நிலை சரியானது போல நடித்து ஏமாற்றுகிறார்.
ரேகா மீது சீதாவுக்கு வந்த டவுட்
இதை பயன்படுத்திக் கொண்ட சிந்தாமணி, "உன் அப்பாவுக்கு நீ அருகில் இருந்தால் தான் நிம்மதி" என்று கூறி, ரேகாவை இரண்டு நாட்கள் அங்கேயே தங்க வைக்கிறார். ரேகாவும், சத்யாவும் தேவையான பொருட்களை எடுக்க சத்யாவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு ரேகா தன் வீட்டில் உள்ள நிலைமையை விளக்க, சத்யாவின் அம்மாவும் அவர்களை ரேகாவின் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறார். ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் சீதாவுக்கு எழத் தொடங்குகிறது.
Siragadikka Aasai : சவால்விட்ட ரோகிணிக்கு சவுக்கடி கொடுத்த விஜயா... மனோஜை மிரட்டிய கனகாவின் அம்மா!
சீதாவை சமாதானப்படுத்த வந்த அருண்
இதற்கிடையில், சீதாவை சந்திக்க அருண், தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வருகிறார். கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டு, மீண்டும் தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடுமாறு கெஞ்சிக் கேட்கிறார். சீதாவை எப்படியாவது வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அருண் முயற்சிக்கிறார். அருணின் இந்த முயற்சி சக்சஸ் ஆகுமா? சீதா என்ன முடிவு எடுப்பார்? சிந்தாமணியின் சதித் திட்டம் வெற்றிபெறுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.
Siragadikka Aasai : ஆபரேஷன் தியேட்டரில் மீனா... விஜயாவிடம் உண்மையை போட்டுடைத்த ரோகிணி!

