MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Serial : சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... தொடங்கிய வேகத்தில் இழுத்து மூடப்படும் புத்தம் புது சீரியல்..!

Serial : சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... தொடங்கிய வேகத்தில் இழுத்து மூடப்படும் புத்தம் புது சீரியல்..!

Sun TV Serial End Soon : செல்லமே செல்லமே, ஆடுகளம் சீரியல்களை தொடர்ந்து சன் டிவி மற்றுமொரு புத்தம் புது சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளது. அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 17 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sun TV Serial Climax
Image Credit : instagram

Sun TV Serial Climax

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்காக தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது சன் டிவி. தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த ஆண்டு தொடங்கிய சீரியல் ஒன்றை தற்போது முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டதாம். அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வினோதினி சீரியல் கதை
Image Credit : Youtube

வினோதினி சீரியல் கதை

குடும்ப உறவுகள், தாய்மையின் வலிமை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான வினோதினி தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு மே மாத இறுதியில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், குடும்ப ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. கணவனை இழந்த பிறகு இரண்டு குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற போராடும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான பயணமே இந்த தொடரின் மையக் கதையாக அமைந்திருந்தது.

Related Articles

Related image1
Sun Tv: தொடரும் சீரியல் நேர மாற்றங்கள்! சன் டிவியின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
Related image2
Sun TV : 3 வருஷமா வெற்றிநடைபோட்ட சீரியலை திடீரென இழுத்து மூடும் சன் டிவி - காரணம் என்ன?
34
முடிவுக்கு வரும் வினோதினி சீரியல்
Image Credit : Youtube

முடிவுக்கு வரும் வினோதினி சீரியல்

குடும்ப உறவுகள், தியாகம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து நகர்ந்த கதை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த தொடரில் ஆர்த்திகா, அரவிந்த் ஆகாஷ், கிருஷ்ணா, ரியா மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பும், குடும்ப பின்னணியில் அமைந்த திரைக்கதையும் தொடருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'வினோதினி', தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளைமாக்ஸ் எப்போ?

கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொடரின் இறுதி எபிசோடுகள் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இருப்பினும், சீரியலின் நிறைவு குறித்து சேனல் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'வினோதினி' சீரியலின் முடிவு எப்படி இருக்கும்? ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் கிளைமாக்ஸ் அமையுமா? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

44
சன் டிவி ரசிகர்கள் ஷாக்
Image Credit : facebook

சன் டிவி ரசிகர்கள் ஷாக்

சன் டிவியில் அடுத்தடுத்து சீரியல்களுக்கு எண்டுகார்டு போடப்பட்டு வருகிறது. அண்மையில் மதிய நேர தொடரான ஆடுகளம் சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதவிர மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த செல்லமே செல்லமே என்கிற தொடரும் கடந்த மாதம் முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்த சீரியலின் முடிவால், கயல் சீரியலை ஒரு மணிநேர ஸ்பெஷலாக மாற்றிவிட்டனர். விரைவில் இந்த சீரியல்களுக்கு பதிலாக புத்தம் புது தொடர்கள் களமிறங்க உள்ளது. அது என்னென்ன தொடர்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவை அவமானப்படுத்திய விஜயா... அண்ணாமலை கொடுத்த தரமான பதிலடி
Recommended image2
Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!
Recommended image3
Kadhal Kadhal Kadhal : "உங்களை எனக்கு பிடிக்கல"... அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த மது... ஸ்வேதாவின் லவ் புரபோசல்
Related Stories
Recommended image1
Sun Tv: தொடரும் சீரியல் நேர மாற்றங்கள்! சன் டிவியின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
Recommended image2
Sun TV : 3 வருஷமா வெற்றிநடைபோட்ட சீரியலை திடீரென இழுத்து மூடும் சன் டிவி - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved