- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Sun TV : 3 வருஷமா வெற்றிநடைபோட்ட சீரியலை திடீரென இழுத்து மூடும் சன் டிவி - காரணம் என்ன?
Sun TV : 3 வருஷமா வெற்றிநடைபோட்ட சீரியலை திடீரென இழுத்து மூடும் சன் டிவி - காரணம் என்ன?
தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வந்த பிரபல சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வர உள்ளது சன் டிவி.

Sun TV Serial End Soon
சின்னத்திரையில் நம்பர் 1 சேனலாக சன் டிவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். இதற்கு போட்டியாக பல்வேறு சேனல்கள் வந்தாலும், சன் டிவியை முறியடிக்கும் வகையில் யாருமே சீரியலில் கோலோச்ச முடியவில்லை. அந்த அளவுக்கு தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் சீரியல்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வந்த முன்னணி சீரியல் ஒன்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளனர். அந்த சீரியலின் கிளைமாக்ஸும் ஜூலை 12ந் தேதி ஒளிபரப்பாக உள்ளதாம்.
முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
அந்த சீரியல் வேறெதுவுமில்லை... திவ்யா ஸ்ரீதர் நடித்த செவ்வந்தி சீரியல் தான். சன் டிவியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் புது சீரியலின் வரவால் செவ்வந்தி சீரியலில் நேரம் மாற்றப்பட்டு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. கணவரை இழந்த இளம் பெண் குழந்தையையும் குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார். வாழ்க்கையின் சவால்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து தான் செவ்வந்தி சீரியல் எடுக்கப்பட்டு இருந்தது.
செவ்வந்தி சீரியல் கிளைமாக்ஸ்
செவ்வந்தி சீரியலை ரத்னம், ஜாகிர் ஹுசைன், செந்தில் குமார் ஆகியோர் இயக்கினர். இந்த சீரியலுக்கு குமரேசன், ஜார்ஜ் ஆகியோர் திரைக்கதை அமைத்து இருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இந்த சீரியல் தெலுங்கில் கீதாஞ்சலி என்கிற பெயரிலும், கன்னடத்தில் சீதா ராமம் என்கிற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த அளவுக்கு பிற மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் செவ்வந்தி சீரியலின் கதைக்களம் இருந்தது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதனை முடிக்க உள்ள தகவல் அந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வந்திக்கு பதில் என்ன சீரியல்?
செவ்வந்தி சீரியல் வருகிற ஜூலை 12ந் தேதி உடன் முடிவடைய உள்ளதாம். இந்த சீரியலுக்கு பதில் இனி காலை 11 மணிக்கு மருமகளே வா அல்லது பூங்கொடி சீரியல் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகள் நல்ல வரவேற்பை பெற்று வந்த செவ்வந்தி சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில மொக்கை சீரியல்களையெல்லாம் விட்டுவிட்டு இந்த சீரியலை ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.