MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கணவருக்கு காஸ்ட்லி பைக்; ரேவதியின் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்: காரணம் என்ன? கார்த்திகை தீபம் எபிசோடு அப்டேட்!

கணவருக்கு காஸ்ட்லி பைக்; ரேவதியின் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்: காரணம் என்ன? கார்த்திகை தீபம் எபிசோடு அப்டேட்!

Karthigai Deepam Serial Today 1153rd Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கிற்கு கார் வாங்கி கொடுக்கலாமா, பைக் வாங்கி கொடுக்கலாமா என்ன வாங்கி கொடுக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் ரேவதி இருக்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 17 2026, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Revathi Plan to Buy Costly Bike For Her Husband Karthik
Image Credit : Zee Tamil You Tube

Revathi Plan to Buy Costly Bike For Her Husband Karthik

நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய மார்ச் 17ஆம் தேதிக்கான 1153ஆவது எபிசோடில் ரேவதி தனது கணவருக்கு என்ன வாங்கி கொடுக்கலாம் என்ற தீவிர யோசனையில் இருக்கிறார். சின்னத்திரையில் மிகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். ஒரு வழியாக கோயில் புதையல் நகைகளை திருடி சென்றது யார் என்றும், அதை மறைத்து வைத்தது யார் என்றும் கண்டுபிடித்து தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் நிரூபித்துள்ளார். அதன் பிறகு சாமுண்டீவரிக்கு எல்லா உண்மையும் தெரிய வரவே சந்திரகலாவை போலீஸில் பிடித்து கொடுத்தார்.

25
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode

பின்னர், ஜெயிலில் இருந்த அவரை சிவனாண்டி ஜாமினில் வெளியில் எடுத்தார். இனிமேல் உன்னுடைய அக்கா வீட்டிற்கு போக வேண்டாம், அங்கு உன்னை உள்ளே விடமாட்டார்கள். இனிமேலாவது இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று கேட்டார். ஆனால், அதற்கு சந்திரகலா சம்மதிக்கவில்லை. அக்கா வீட்டிற்கு போவதற்கு வேறு வழி இருக்கிறது என்று சொல்லிவிட்டு நேராக அக்கா வீட்டிற்கு சென்று டிராமாவை அரங்கேற்றி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைத்தார்.

35
Karthigai Deepam Serial
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial

அதற்கு அவரோ ஒரு கண்டிஷன் போட்டார். இனிமேல் உனக்கும் உன்னுடைய கணவருக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது. அவன் கட்டிய தாலியை கழற்றி கொடுத்துவிட வேண்டும் என்று கூறவே, வேறு வழியில்லாத சந்திரகலா பஞ்சாயத்தில் தாலியை கழற்றி கொடுத்தார். அதன் பிறகு கார்த்திக் உங்களது அம்மாவை கொலை செய்தது யார் என்று கண்டுபிடித்து என்னுடைய மாமா கையால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பேன் என்று கார்த்திக் சபதம் போட்டார்.

குஷியில் ரேவதி... கண்ணீரில் சந்திரா! சாமுண்டீஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் - கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!

45
Zee Tamil Karthigai Deepam Serial
Image Credit : Zee Tamil You Tube

Zee Tamil Karthigai Deepam Serial

இந்த நிலையில் தான் என்ன ஏது என்று தெரியாத நிலையில் தனது கணவருக்கு ரேவதி சர்ஃப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க திட்டமிட்டார். அதன்படி, தனது சுவாதியிடமும், அக்கா ரோகிணியிடமும் ஐடியா கேட்டார். சுவாதி கார் வாங்கி கொடுக்கலாம் என்று ஐடியா கொடுக்க, ரோகிணி நீயே எதாவது ஐடியா இருந்தால் சொல் என்று கேட்டார். அதற்கு ரேவதி ஒரு காஸ்ட்லியான பைக் வாங்கி கொடுக்கலாம் என்றார். இதுவரையில் பல விதமான கார் ஓட்டி பார்த்திருக்கிறோம்.

மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

55
Chamundeshwari
Image Credit : Zee Tamil You Tube

Chamundeshwari

ஆனால், பைக் ஓட்டி தான் பார்க்கவில்லை. அதனால், பைக் வாங்கி கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலுக்கான இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ முடிந்தது. ரேவதி காஸ்ட்லி பைக் வாங்குவதற்கான காரணம் என்ன என்பது பற்றி இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் ரேவதி... கண்ணீரில் சந்திரா! சாமுண்டீஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் - கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
அம்பலமான ஆதி குணசேகரனின் சதித் திட்டம்.. பூஜையை தடுத்து நிறுத்திய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
சிந்தாமணியின் பிளானை கேட்டு ஆடிப்போன விஜயா... மனோஜை டேமேஜ் பண்ணிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved