மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Manithan Deivamagalam Movie Release Date Announced : செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் மனிதன் செல்வமாகலாம் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Manithan Deivamagalam
Manithan Deivamagalam Movie Release Date Announced : ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தவர் இயக்குநரும், நடிகருமான செல்வராகன். சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகன். இப்போது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மனிதன் செல்வமாகலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Manithan Deivamagalam Movie Release Date
அதன்படி இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் டீசர் வெளியானது. அதில், உலகத்தைப் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும், டீசரில் இருவரும் பேசுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மனிதன் தெய்வமாகலாம் படம் படமாக்கப்பட்டிருக்கிறது.
Selvaraghavan
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் உடன் இணைந்து மைம் கோபி, கௌசல்யா, ஒய் ஜி மகேந்திரா, சுதா, குஷி ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். Vyom Entertainments நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏகே ப்ரியன் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இந்தப் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவம் மற்றும் எதார்த்தமான நடிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.