- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Neck Darkness : வீட்டுல தயிர் இருக்கா? கழுத்து கருமை வெறும் 2 வாரத்துல நீக்க சூப்பர் டிப்ஸ் இருக்கு; இனி அசிங்கபட வேணாம்
Neck Darkness : வீட்டுல தயிர் இருக்கா? கழுத்து கருமை வெறும் 2 வாரத்துல நீக்க சூப்பர் டிப்ஸ் இருக்கு; இனி அசிங்கபட வேணாம்
கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவும் சில சூப்பரான டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Remove Neck Darkness Home Remedy
அழகாக இருக்க வேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான விலையுயர்ந்த க்ரீம்கள், ஃபேஷ்பேக்குகள், ஃபேஸ் மாஸ்குகளை பயன்படுத்துகிறோம். ஆனால், இப்படி முகத்திற்கு காட்டும் அக்கறையை சிலர் கழுத்திற்கு சுத்தமாக காட்டுவதில்லை. இதனால் அவர்களது கழுத்து பகுதி ரொம்ப கருமையாக இருக்கும்.
இது தவிர உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு போன்ற பல காரணங்களாலும் கழுத்து கருப்பாக இருக்கும். முகம் அழகாக இருந்து கழுத்து மட்டும் கருப்பாக இருந்தால் மொத்த அழகையும் கெடுத்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்து கருமையை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு
இந்த இரண்டு பொருட்களும் கழுத்தில் இருக்கும் கருமையை நிரந்தரமாக நீக்க உதவுகிறது. இதற்கு 1 ஸ்பூன் கடலைமாவுடன் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்து நீரால் கழுத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு 2-3 முறை இப்படி போட்டு வந்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
இதற்கு தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடலாம்.
எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பஞ்சை அதில் நனைத்து கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் கழுத்தை கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்தால் போதும். கழுத்து கருமை முற்றிலும் நீங்கிவிடும்.
உருளைக்கிழங்கு சாறு மற்றும் தயிர் :
உருளைக்கிழங்கு அரைத்து அதிலிருந்து சாற்றை மற்றும் தனியாக எடுத்து, கழுத்தில் தடவி 10 - 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு சூடான நேரம் கழுவவும். கழுத்தில் இருக்கும் கருமை முற்றிலும் நீங்கிவிடும்.
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு இவை இரண்டையும் சமஅளவு எடுத்து இரவு செல்வதற்கு முன் கழுத்தில் தடவி பிறகு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவும். கழுத்து கருமை நீங்கிவிடும்.

