எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற எளிய மற்றும் பயனுள்ள சில தக்காளி பேஸ் பேக்குகள் இங்கே.
சருமத்தைப் பாதுகாக்க தக்காளி ஒரு சிறந்த பொருள். வைட்டமின் சி, ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள தக்காளி, சருமத்திற்குப் பொலிவூட்டி, ஈரப்பதத்தை அளித்து, முகப்பருக்களை எதிர்த்துப் போராடுகிறது. கரும்புள்ளிகள், எண்ணெய் பசை, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைக் குறைத்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தக்காளி உதவுகிறது. வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய தக்காளி ஃபேஸ் பேக்குகள் இதோ...
ஒன்று
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், சிறிது தயிர் ஆகியவற்றைக் கலந்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் வைத்திருக்கவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
இரண்டு
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் தயாரிக்கவும். இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இந்த பேக் சிறந்தது.
மூன்று
2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும்.
நான்கு
சருமம் பொலிவு பெற, தக்காளி கூழுடன் சர்க்கரையைக் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த பேக் முகத்தை அழகாக்க உதவும்.
ஐந்து
இரண்டு ஸ்பூன் தக்காளி சாறுடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நன்கு உலர்ந்த பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.


