- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Skincare Mistakes : குளிர்கால சரும பராமரிப்பில் இதை மட்டும் செய்யாதீங்க! சருமத்தை கெடுக்கும் '5' விஷயங்கள்
Winter Skincare Mistakes : குளிர்கால சரும பராமரிப்பில் இதை மட்டும் செய்யாதீங்க! சருமத்தை கெடுக்கும் '5' விஷயங்கள்
குளிர்காலத்தில் சரும பராமரிப்பில் நாம் செய்யும் சில தவறுகள் மற்றும் அதை சரி செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம்.

Winter Skincare Mistakes
சருமத்தை ஆரோக்கியமாக வைக்க நாம் தினமும் சில சரும பராமரிப்பு விஷயங்களை செய்து வருகிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் நாம் சில விஷயங்களை செய்து விடுகிறோம். இதன் காரணமாக சருமம் பாதிப்படைவதோடு சரும பிரச்சனைகளையும் உண்டாக்கும். அந்த வகையில் குளிர்காலத்தில் சரும பராமரிப்பின் போது செய்யக்கூடாத சில தவறுகள் மற்றும் அதை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பருக்கள் இருக்கும்போது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாதே!
முகத்திற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது என்றாலும், பருக்கள் இருக்கும் போது அதை பயன்படுத்துவது நிலைமையை இன்னும் மோசமாகிவிடும். எனவே பருக்கள் இருக்கும் போது எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது சருமத்தை பாதுகாப்பாக வைக்கும்.
மாய்ஸ்சரைசர் மாற்றாமல் இருப்பது!
கோடைகாலத்தில் பயன்படுத்திய மாய்ஸ்சரைசர் குளிர்காலத்திலும் பயன்படுத்துவது சருமத்தை வறட்சியாக்கும். எனவே குளிர்கால சருமத்திற்கு ஏற்ப ஆலிவ் எண்ணெய், ஜோஜோ பாய் எண்ணெய், கிளிசரின் மற்றும் பெட்ரோலிய ஜெல் போன்ற பொருட்கள் கொண்ட அதிக எண்ணெய் பசை கொண்ட மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
டோனர் பயன்பாடு!
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தவிர்க்க சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு டோனர் பயன்படுத்தவும். பிறகு சீரம் மற்றும் மாய்சரைசர் பயன்படுத்துங்கள். இவை உங்களது சருமத்தில் வறட்சியை நீக்கி, ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
சன்ஸ்கிரீன் தவிர்க்காதே!
சன்ஸ்கிரீன் கோடை காலத்திற்கு தான் அவசியம் குளிர் காலத்தில் தேவையில்லை என்று பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். எனது வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். அதுவும் SPF 30 இருக்கும் சன் ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
ஃபேஸ் வாஷ் மாற்றுவது முக்கியம்!
கோடைகலத்தில் பயன்படுத்திய ஃபேஸ் வாஷை குளிர்காலத்தில் பயன்படுத்துவதை சருமத்தை அதிகமாக வறட்சியாகும். எனவே கிளிசரின், கற்றாழை ஜெல் போன்ற நீரேற்றம் நிறைந்த பொருட்கள் கொண்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும். அதே சமயம் ஆல்கஹால் மற்றும் திடமான வாசனை கொண்ட ஃபேஸ் வாஷ்களை தவிர்ப்பது நல்லது.
கைகள் மற்றும் உதட்டுக்கும் கவனம் தேவை!
குளிர்காலத்தில் முகம் மட்டுமல்ல கைகள் மற்றும் உதட்டுக்கும் கூடுதல் கவனம் தேவை என்பதால், ஈரப்பதமூட்டும் ஹேண்ட் க்ரீம் மற்றும் லிப் பாம் பயன்படுத்துங்கள்.
மேலே சொன்ன விஷயங்களை தவிர குளிர்காலத்தில் சூடான சூப்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ்கள் போன்ற பருவத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

