- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!
Winter Skincare Tips : பனியால் சருமத்தில் ஏற்படும் சொறியைத் தடுக்க ஈஸியான வழிகள்!
குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் சொறியை போக்க கீழே சொல்லப்பட்டுள்ள டிப்ஸ்களை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. சொறி நீங்கும்.

Winter Skincare Tips
குளிர்காலம் வந்தாலே சருமம் வறட்சியாகி அரிப்பை ஏற்படுத்தும். இதனால் சொறியும் போது சருமத்தில் வெள்ளை வெள்ளையாகவும் வரும். மேலும் இரவு நேரத்தில் இந்த அரிப்பு பிரச்சினையானது ரொம்பவே அதிகமாகவே இருக்கும். இதே பிரச்சினையை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மட்டும் ஃபாலோ பண்ணினால் போதும். இனி சருமம் அரிக்காது. அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
மாய்ஸ்சரைசர் :
பொதுவாக வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் சருமம் அதிகமாக வறட்சி அடையும். எனவே, இதை தவிர்க்க குளிர்காலத்தில் காலை மாலை என இரண்டு வேளையும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். குளித்திட்டு வந்தவுடன் சருமத்தில் ஈரம் காய்வதற்கு முன்பே உடனே மாய்ஸ்ரைசர் அப்ளை செய்யவும்.
அதிக சோப்பு வேண்டாம்!
குளிர்காலத்தில் சூடான நீரில் நன்கு சோப்பு போட்டு குளிப்போம். ஆனால் அதிகமாக சோப்பு பயன்படுத்துவது சருமத்தில் அதிக சொறியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் சோப்பில் அதிக கெமிக்கல்கள் இல்லாத படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சன் ஸ்கிரீன் :
குளிர்காலத்தில் வெயிலா அடிக்க போகிறது என்று நீங்கள் நினைத்து சன் ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். ஏனெனில் குளிர்காலத்திலும் சூரிய கதிர்வீச்சின் தாக்கம் குறைவாக இருக்கும். எனவே குளிர்காலத்திலும் சூரிய ஒளி சருமத்தை பாதிக்காத படி சன் ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதிர்கள். அதுபோல கைக்கு கிளவுஸ், தொப்பி அணிவது நல்லது.
சப்ளிமெண்டுகள் :
குளிர்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி யை குறைவாக பெற முடியும். உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டால் சருமம் அதிகமாக வறட்சியாகி அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பை போக்க மருத்துவர் ஆலோசனைப்படி வைட்டமின் டி சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளுங்கள். இவை அரிப்பை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும்.
எப்போது மருத்துவரையும் பார்க்க வேண்டும்?
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் பின்பற்றியும் குளிர்காலத்தில் சருமத்தில் அரிப்பு ரொம்பவே அதிகமாக இருந்தால் உடனே ஒரு நல்ல ஸ்கின் டாக்டரை பார்த்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

