- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்
குளிர்காலத்தில் முகத்திற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Lemon Juice For Skin
பொதுவாக முகத்திற்கு சில ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது அதில் கொஞ்சமாக எலுமிச்சை சாறு சேர்ப்பது வழக்கம். காரணம் எலுமிச்சை சாறில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜனை அதிகரிக்க செய்யும். ஆனால் குளிர்காலத்தில் எலுமிச்சை சாறு முகத்திற்கு பயன்படுத்தலாமா? எந்த சருமத்தினர் முகத்திற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்தக் கூடாது? அப்படி பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தில் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாமா?
பலரும் முகத்திற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துகிறார்கள். சிலர் நேரடியாக, இன்னும் சிலரோ சில ஃபேஸ் பேக்குகளுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் எலுமிச்சை சாறு முகத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே எலுமிச்சை சாற்றை ஒருபோது முகத்தில் நேரடியாக பயன்படுத்தாதீர்கள்.
எலுமிச்சை சாறுக்கு பதிலாக என்ன தடவலாம்?
சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய எலுமிச்சை சாறு உதவுகிறது என்றாலும், அதையும் விட அதிக பலன்களைப் பெற நீங்கள் வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
நினைவில் கொள் :
உங்களது முகத்தில் பருக்கள் இருந்தால் எலுமிச்சை சாறு ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கின்றன. அது பருக்களை அதிகமாக்குவது மட்டுமல்லாமல், புண்கள், கொப்புளங்கள் கூட வருவதற்கு வழிவகுக்கும்.
முகத்தில் பருக்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சருமத்தில் அரிப்பு, பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்றால் தக்காளி, எலுமிச்சை சாறு, தயிர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக உடனே சரும நிபுணரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
