- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Winter Skin Care Tips : குளிர்காலத்துல இதுதான் பெஸ்ட் ஃபேஸ் பேக்! முக வறண்டு போகாம பொலிவா இருக்கும்
Winter Skin Care Tips : குளிர்காலத்துல இதுதான் பெஸ்ட் ஃபேஸ் பேக்! முக வறண்டு போகாம பொலிவா இருக்கும்
குளிர்காலத்தில் முகம் வறண்டு போகாமல் பொலிவாக இருக்க சூப்பரான ஃபேஸ் பேக் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Winter Skin Care Tips
தற்போது குளிர்காலம் என்பதால் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சீசனில் ஆரோக்கியம் மட்டுமல்ல, பல சரும பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம். குறிப்பாக சரும வறட்சி, வெடிப்பு ஏற்படும். இந்த சமயத்தில் மாய்ஸ்ரைசர் பயன்படுத்தினாலும் பெரிதாக பலன் கிடைக்காது. ஆனால் இதற்கு தீர்வாக வெந்தயம் உதவும். ஆமாங்க வெந்தய ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவாக மாற்றும். அதை எப்படி பயன்படுத்துவது என்று இப்போது இங்கு பார்க்கலாம்.
வெந்தய ஃபேஸ் பேக்....
முதலில் ஒரு கப் வெந்தயப் பொடி, ஒரு கப் கற்றாழை ஜெல், ஒரு கப் பாதாம் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலக்கவும். வறுத்து அரைத்த வெந்தயப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியால் முகத்தை சுத்தம் செய்யவும். இதனால் முகம் பொலிவு பெறும். சரும வறட்சியும் குறையும்.
வெந்தய ஃபேஸ் பேக்கின் நன்மைகள்....
வெந்தயத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் கரும்புள்ளிகளைக் குறைக்கும். வைட்டமின்கள் சருமத்தை உள்ளிருந்து சுத்தம் செய்யும். இது முகத்தை ஈரப்பதமாக வைத்து, வறட்சியைக் குறைக்கும். குறிப்பு: பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். ஒவ்வாமை ஏற்பட்டால், தோல் மருத்துவரை அணுகவும்.

