- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Glowing Skin Routine : மேக் அப் தேவையில்ல.. இந்த 4 விஷயங்களை தினமும் காலை செய்ங்க.. முகம் கண்ணாடி போல ஜொலிக்கும்!
Glowing Skin Routine : மேக் அப் தேவையில்ல.. இந்த 4 விஷயங்களை தினமும் காலை செய்ங்க.. முகம் கண்ணாடி போல ஜொலிக்கும்!
தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பின்பற்றி வந்தால் உங்களது முகம் கண்ணாடி போல ஜொலி ஜொலிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Glowing Skin Routine
எல்லாருமே அழகாக இருக்க தான் விரும்புவார்கள். இதற்காக அவர்கள் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இவை முகத்தை அழகாக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை சேதப்படுத்தும். ஆனால், இவை ஏதுமில்லாமல் தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த 4 விஷயங்களை பின்பற்றி வந்தால் போதும். உங்களது முகம் எப்போதுமே முகம் கண்ணாடி போல ஜொலி ஜொலிக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இப்போது இந்த பதிவில் காணலாம்.
குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்!
முகம் ஜொலி ஜொலிக்க தினமும் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவவும். குளிர்ந்த நீரானது முகத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்கும். மேலும், முகத்தை சுத்தம் செய்ய இரசாயனம் அல்லாத லேசான ஃபேஸ் வாஷ் அல்லது கிளென்சர் பயன்படுத்தலாம்.
அடுத்து டோனிங் :
குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்த பிறகு டோனிங் செய்வது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். முகத்தை கழுவிய பின் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். மேலும் கறைகளையும் குறைக்கும். இதனால் சருமம் பளபளக்கும்.
சீரம் தடவலாம் :
டோனர் பயன்படுத்திய சில நிமிடங்கள் கழித்து சீரம் தடவவும். இதற்கு வைட்டமின் சி பயன்படுத்தலாம். இது சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து சருமத்தின் வறட்சியை குறைக்கும் மற்றும் சருமத்தை படிப்படியாக பிரகாசமாக்கும்.
மாய்ஸ்சரைசர் :
சீரம் தடவிய பிறகு 1-2 நிமிடங்கள் கழித்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
சன்ஸ்கிரீன்
அதுபோல வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தை சேதப்படுத்தும்.

