தினமும் காலையில் தூங்கி எழும்போது கழுத்து, தோள்பட்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் குறித்து இங்கு காணலாம்.

பலரும் காலையில் தூங்கி எழும்போது கழுத்து அல்லது தோள்பட்டை வலியுடன் எழுந்திருக்கிறார்கள். மேலும் இதை வயதான அறிகுறி என்று கூட நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மோசமான தூக்க நிலை, மெத்தை, பொருத்தமற்ற தலையணை, அதிக நேரம் மொபைல் பார்த்தல், அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பழக்கவழக்கங்களால் இது போன்ற வலி ஏற்படும்.

இந்த வலி ஏற்பட்டு தானாகவே சரியானாலும் கூட தொடர்ச்சியான இந்த வலி தூங்கும் நிலை, அன்றாட வேலை என ஒட்டுமொத்த நல்வாழ் வாழ்வையும் பாதிக்கும். மேலும் தூக்கத்தின் போது கழுத்து, தோள்பட்டை வலி ஏற்பட்டால் தலையணை மட்டுமல்ல பிற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரி இப்போது இந்த பதிவில் காலையில் எழும்போது கழுத்து, தோள்பட்டை வலி இல்லாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மற்றும் பின்பற்றினால் போதும். அவை..

1. தலையணையை மாற்று

தூங்கும்போது கழுத்தின் வளைவை பராமரிக்க தலையணையை பயன்படுத்துவோம். ஆனால் ரொம்பவே தட்டையான அல்லது உயரமான தலையணையை பயன்படுத்தினால் கழுத்து பகுதியானது வளைந்து தசைகள் மற்றும் தசை நார்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்து வலியை ஏற்படுத்தப்படும். எனவே நல்ல விளிம்புடன் கூடிய வளைவான தலையணையை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு ஏற்படும் அசெளகரியம், விறைப்பை கணிச்சமாக குறைக்க உதவும்.

2. குப்புற படுத்து தூங்காதே!

கழுத்து, தோள்பட்டை வலிக்கு பொதுவான காரணம் குப்புறப்படுத்து தூங்குவது தான். இந்த நிலையில் துங்கினால் கழித்து நீண்ட நேரம் ஒரு பக்கமாக திரும்பி இருக்கும் இதனால் முதுகெலும்பு மற்றும் அதை சுற்றியுள்ள தசைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, பிறகு தசைப்பிடிப்பு, விறைப்பு மாற்றும் அசெளகரியத்தை உண்டாக்கும்.

3. தூங்கும் நிலை

காலையில் எழும்போது கழுத்து, தோள்பட்டை வலி வராமல் இருக்க இரவு தூங்கும் நிலையானது சரியாக இருக்க வேண்டும். இதற்கு உங்களது முதுகு கீழே படும் படி நேராக அல்லது பக்கவாட்டில் சாய்ந்து தூங்குவது நல்லது. இப்படி தூங்கினால் உங்கள் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணையை வைக்கவும். இதனால் முதுகில் இயற்கையான வளைவை பராமரிக்க பெரிதும் உதவும். இதனால் ஒட்டுமொத்த முதுகெலும்பு அழுத்தமும் குறையும். அதுபோல பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினால் தலையணை சரியான உயரத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

4. மெத்தையை மாற்று

காலையில் எழும்போது கழுத்து மற்றும் தோள்களில் வலி ஏற்படுகிறது என்றால் உங்களது படுக்கை மெத்தை இதற்கு முக்கிய காரணமாகிறது. நீங்கள் தூங்கும் மெத்தை மென்மையாக இருந்தால் அது உங்களது உடலை உள்ளிழுத்து கழுத்து தோள்களில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். அது போல அதிக இறுக்கம் கொண்ட மெத்தைகள் அழுத்த புள்ளிகளை உருவாக்கும். எனவே நடுத்தர அளவில் ஒரு நல்ல மெத்தையை பயன்படுத்துங்கள். இதனால் கழுத்து, இடுப்பு, தோள்பட்டையில் போதுமான ஆதரவு கிடைக்கும். வலியும் ஏற்படாது.

5. தூக்க பழக்கம்

நீங்கள் சரியான மெத்தை மற்றும் தலையணையில் தூங்கினாலும் சரியான தூக்கப் பழக்கம் இல்லை என்றால் கழுத்து தோள்பட்டையில் அசெளகரியம் ஏற்படும். இரவு அதிக நேரம் மொபைல் டிவி பார்ப்பது, காஃபின் கலந்த பானங்களை தூங்கும் முன் குடிப்பது, தூக்கமின்மை போன்றவை உங்களது தூக்கத்தின் தரத்தை பாதித்துவிடும். இது தவிர மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற தூக்க நேரம் போன்றதையும் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் காலையில் எழும் போது கழுத்து, தோள்பட்டையில் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.