- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கோமதி போனை அபேஸ் பண்ணிய காந்திமதி... பாட்டியின் பலே திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
கோமதி போனை அபேஸ் பண்ணிய காந்திமதி... பாட்டியின் பலே திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மீனா உடன் கோவிலுக்கு சென்ற நிலையில், அவரின் போனை எடுத்து வைத்து ஒரு பிளான் போட்டுள்ளார் காந்திமதி. அதைப்பற்றி பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தன் பேரன் குமாரின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் வீட்டை விட்டு துரத்திவிடப்பட்ட காந்திமதி, தற்போது தனது மகள் கோமதி வீட்டில் வசித்து வருகிறார். அவர் இங்கு வந்த பின்னர் தன் மகளும், மருமகன் பாண்டியனும் பேசாமல் இருப்பதை பார்த்து அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதேபோல் அரசியை தன்னுடைய பேரன் குமாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும் ஒரு பிளான் போட்டிருக்கிறார். ஆனால் இதற்கு அரசி சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மீனா உடன் சமாதானம் ஆன கோமதி
இன்றைய எபிசோடில் கோமதி, மீனாவுக்கு போன் பண்ணி தான் ஸ்ரீரங்கம் போவதாகவும், தனக்கு துணையாக நீயும் வரும்படி கூறுகிறார். நேத்து கோவில்ல வச்சு என்னைய அவ்வளவு திட்டுட்டு இப்போ கூட வான்னு கூப்பிடுறீங்க, என்னையெல்லாம் இனிமேல் திட்டக்கூடாது என மீனா சொல்கிறார். இதைக்கேட்ட கோமதி, நீ எதுக்காக தங்கமயிலை கூட்டிட்டு வந்த, அதனால தான் நான் உன்னைய திட்டுனேன் என சொல்கிறார். பின்னர் இருவரும் ஒருவழியாக பேசி சமாதானம் ஆன பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர சம்மதிக்கிறார் மீனா. பின்னர் செந்திலிடமும் தான் அத்தையோடு ஸ்ரீரங்கம் போகும் விஷயத்தை சொல்கிறார் மீனா.
கோவிலுக்கு கிளம்பும் கோமதி
அதேபோல் கோமதியும் வீட்டில் தன்னுடைய அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். எங்கடி போறா என காந்திமதி கேட்க, நான் ஸ்ரீரங்கம் போறேன், வர்றதுக்கு நைட் ஆகிடும் என கூறிவிட்டு செல்கிறார். கோமதி ஸ்ரீரங்கம் போவதை பயன்படுத்தி, அவளையும், பாண்டியனையும் சேர்த்துவைத்துவிட வேண்டும் என திட்டம் போடுகிறார் காந்திமதி. அந்த நேரத்தில் தான் கோமதி தன்னுடைய போனை வீட்டிலேயே மறந்து வைத்து சென்ற விஷயம் காந்திமதிக்கு தெரியவருகிறது. அந்த போனை வைத்தே அவர்களை சேர்த்துவைத்துவிடலாம் என திட்டம் போட்டு இருக்கிறார் காந்திமதி.
காந்திமதியின் பலே பிளான்
கோமதிக்கும் பஸ் ஸ்டாப் போன பின்னர் தான் போன் எடுத்துட்டு வராத விஷயமே தெரியவருகிறது. மீனாவிடம் என் போன் இல்லேனா என்ன, உன்னோட போன் இருக்குல்ல அதுனால பிரச்சனை இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறார் கோமதி. வீட்டில் இருக்கும் காந்திமதி, தன் மகளின் போனை சைலண்டில் போட்டு வைத்ததோடு, அதற்கு ஏதேனும் போன் வந்தால் சத்தம் கேட்கிறதா என்பதை கண்டுபிடிக்க, அரசியின் போனை வாங்கி அதற்கு போன் போட்டு பார்க்கிறார். சத்தம் வராததை அடுத்து கோமதியின் போனை ஒரு டப்பாவிற்குள் போட்டு அடைத்து வைக்கிறார்.
கோமதியை வலைவீசி தேடும் பிள்ளைகள்
இதையடுத்து தன்னுடைய டிராமாவை ஸ்டார்ட் பண்ணும் காந்திமதி, வீட்டில் உள்ள அனைவரிடம் உங்க அம்மாவை காலையில் இருந்தே காணோம் என கூறுகிறார். அனைவரும் கோமதிக்கு போன் போட்டு பார்க்கிறார்கள். ரிங் அடித்தாலும் அவர் எடுக்கவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி எப்படியாச்சும் பாண்டியனையும், கோமதியையும் சேர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார் காந்திமதி. பாண்டியனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அவர் கோமதியை தேடிச் செல்வாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

