- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா, தங்கமயில் மற்றும் கோமதியை கோவிலுக்கு வர வைத்து அவர்களை பேச வைக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா, தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை எப்படியாவது கோமதிக்கு தெரியவைக்க வேண்டும் என திட்டமிடுகிறார். ஏற்கனவே சரவணனிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன தங்கமயில் அவர் கேட்ட கேள்வியால் மனமுடைந்து போய் இருக்கிறார். அதேபோல் கோமதியும் கேட்டால் என்ன ஆகும் என்கிற பயத்தில் அவரிடம் விஷயத்தை சொல்லாமல் இருக்கிறார் தங்கமயில். ஆனால் மீனா அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்க பிளான் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மயிலுடன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம்
இன்றைய எபிசோடில், மீனா தங்கமயிலுக்கு போன் போட்டு கோவிலுக்கு வர சொல்கிறார். முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லி மயிலை கோவிலுக்கு வரச் சொல்கிறார் மீனா. இதை பாக்கியம் ஒட்டுக் கேட்டுவிடுகிறார். அதன்பின்னர் தங்கமயில் கிளம்பி கோவிலுக்கு செல்லும்போது நானும் வரேன்னு சொல்லி, பாக்கியமும் கிளம்புகிறார். மறுபுறம் மீனா தன்னுடைய அத்தை கோமதியை கோவிலுக்கு அழைத்து வந்து அவருடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னீயே என்னது என கோமதி கேட்க, கொஞ்சம் காத்திருங்க என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார் மீனா.
ஷாக் ஆன மீனா
கோவிலுக்கு வெளியே வந்து பார்த்தபோது மீனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தங்கமயில், அவருடைய அம்மாவையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்துள்ளதை பார்த்து ஷாக் ஆகிறார் மீனா. எதுக்கு மயிலு உங்க அம்மாவை அழைச்சிட்டு வந்த என மீனா கேட்க, ஏன் நான் என் பொண்ணோடு கோவிலுக்கு சாமி கும்பிட வந்தா உனக்கென்ன என கேட்கிறார் பாக்கியம். பின்னர் தங்கமயில் வேறுவழியின்றி என்ன விஷயம் என்பதை சொல்லிவிடுகிறார். அதைக்கேட்ட பாக்கியம், நான் வந்து பேசுனா என்ன ஆகிடப் போகுது என சொல்ல, அதற்கு மயில், நீங்க வந்தால் பிரச்சனை தான் வரும் என கூறுகிறார்.
சண்டை போடும் கோமதி - பாக்கியம்
பின்னர் தங்கமயில் மீனாவை மட்டும் அழைத்துக்கொண்டு உள்ளே போகிறார். கோவிலில் உள்ள கோமதி, தங்கமயிலை பார்த்ததும் பயங்கர கோபம் கொள்கிறார். அவர்கள் சொல்ல வருவதைக் கேட்காமல், அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். அந்த நேரம் பார்த்து பாக்கியம் அங்கு வருகிறார். அதன்பின்னர் இருவருமே கடுமையாக சண்டைபோடுகிறார்கள். அவர்கள் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட, தங்கமயிலும், மீனாவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

