MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கள்ள உறவில் சரவணன்; மீனாவிடம் கதறி அழுத மயில்... கதிரிடம் திட்டுவாங்கிய ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

கள்ள உறவில் சரவணன்; மீனாவிடம் கதறி அழுத மயில்... கதிரிடம் திட்டுவாங்கிய ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலியையும் சரவணனையும் ஜோடியாக பார்த்தது பற்றி மீனாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் தங்கமயில். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 09 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் சொன்னால், அவர் விவாகரத்து முடிவை கைவிட்டு தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வார் என்கிற கனவில் இருந்த நிலையில், சரவணன் அப்படியே உல்டாவாக பதிலடி கொடுத்திருக்கிறார். உன் வயிற்றில் வளரும் குழந்தை யாரோடது என கேட்டு, அவரின் கர்ப்பத்தை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருக்கும் தங்கமயில் இனி அவருடன் சேர்ந்து வாழ வேண்டாம் என முடிவெடுத்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
ராஜியை திட்டும் கதிர்
Image Credit : jiohotstar

ராஜியை திட்டும் கதிர்

இன்றைய எபிசோடில், ராஜியும் கதிரும் ஜோடியாக ஒரு டீ கடைக்கு சென்று அங்கு காஃபி வாங்கி குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜி தான் விருப்பமின்றி படித்து வருவதாகவும், நீ எனக்காக ஒரு லட்சம் கட்டிவிட்டாய் என்பதால் கோச்சிங் கிளாஸ் போவதாகவும் சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான சரவணன், நீ ஒன்னும் நான் பணம் கட்டிவிட்டேன் என்பதற்காக படிக்க வேண்டாம். நீ வீட்டிலேயே இரு என கோபமாக சொல்கிறார். இதனால் அப்செட் ஆன ராஜி, எதுக்கு நீ இப்படி நடந்துக்குற, நான் வீட்டுக்கு போறேன் என சொல்லிவிட்டு தனியாக வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார்.

Related Articles

Related image1
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related image2
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
36
கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : jiohotstar

கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மறுபுறம் வீட்டிற்கு வந்த பின்னர் தனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு அது நனவாகும் என ஆசையில் இருந்தேன் ஆனால் அதற்காக நான் உழைக்கவில்லை என்பது நீ சொன்ன பிறகு தான் எனக்கே புரிந்தது. நாளை முதல் நான் அதற்காக உழைக்கிறேன் என சொல்லிவிட்டு இருவரும் தூங்குகிறார்கள். பின்னர் காலையில் கதிர் போனில் அலாரம் அடிக்கிறது. அப்போது அவர் எழுந்து பார்க்கும் போது ராஜி அங்கு இல்லை. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வெளியே சென்ற கதிர், தன்னுடைய பாட்டியிடம் ராஜி பற்றி கேட்க, அவர் ராஜி ஓட்டப்பயிற்ச்சிக்கு சென்றிருப்பதாக சொல்கிறார்.

46
மனம்விட்டு பேசிய ராஜி
Image Credit : jiohotstar

மனம்விட்டு பேசிய ராஜி

பின்னர் கிரவுண்டுக்கு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் கதிர், அங்கு சென்று பார்க்கையில் ராஜி தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்துச் சென்று கொடுக்கும் கதிர், ஏன் தனியா வந்த என கேட்க, இனிமேல் நான் தனியா தான் பயிற்சிக்கு வருவேன் என கூறுகிறார் ராஜி. நாம ஆசைப்பட்டது எதுவும் உழைக்காம நமக்கு கிடைக்காது. ஆனால் நான் அது கிடைக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு உன்மேல கோபம் எதுவுமே இல்லை. இப்போ நான் மீண்டும் என்னுடைய பயிற்சியை தொடர்கிறேன் என கூறிவிட்டு செல்கிறார் ராஜி.

56
மீனாவிடம் ஃபீல் பண்ணிய மயில்
Image Credit : jiohotstar

மீனாவிடம் ஃபீல் பண்ணிய மயில்

மறுபுறம் தங்கமயில், பஸ் ஸ்டாண்டில் மீனாவை சந்தித்து பேசுகிறார். அப்போது, தான் சரவணனை சந்தித்ததாகவும் ஆனால் அவரிடம் பேசவில்லை என்றும் கூறுகிறார். ஏன் என்ன ஆச்சு என மீனா கேட்க, சரவணன் வேறு ஒரு பொண்ணுடன் சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருந்தாரு. எப்படி மீனா என்னைவிட்டு விலகுன கொஞ்ச நாள்லயே அவரால இன்னொரு பொண்ணு கூட பழக முடியுது என தங்கமயில் ஃபீல் பண்ணி சொல்ல, அவங்க யாராச்சும் தெரிஞ்சவங்களா இருப்பாங்க அக்கா, அவரோட ஃபிரெண்டா கூட இருக்கலாம் என தங்கமயிலை சமாதானப்படுத்துகிறார் மீனா. இதையடுத்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார் மயில்.

66
செந்திலுக்கு செம டோஸ் கொடுத்த மீனா
Image Credit : jiohotstar

செந்திலுக்கு செம டோஸ் கொடுத்த மீனா

தங்கமயில் சென்றதும், செந்தில் அங்கு வருகிறார். அவரிடம் கோபமாக பேசும் மீனா, இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறார். உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பொறுமையே கிடையாதுல்ல, ரெண்டு நாள் உங்ககூட பேசாம இருந்தா என்ன பண்ணுவீங்க என மீனா கேட்க, அதற்கு செந்தில் மூணாவது நாள் பேசுவியானு உன் முகத்தையே பார்த்துக்கிட்டு இருப்பேன் என கூறுகிறார். ஹும் நடிக்காதீங்க, நான் 2 நாள் பேசலேனா, 3வது நாள் வேற ஒருத்திகூட போயிடுவீங்க அதுதான ஆம்பளைங்க குணமே என திட்டிவிட்டு ஆட்டோவில் ஏறிக் கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனோஜின் முட்டாள்தனமான பிளான்... சல்லி சல்லியாய் உடைக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved