- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி ஐஏஎஸ் தேர்வுக்காக படிக்காமல் இருப்பதை பார்த்த கதிர் அவருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசி உள்ளார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pandian Stores 2 Upcoming Episode Promo
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒவ்வொரு வாரமும் எதிர்பாரா கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் ரிவீல் ஆனதை வைத்து ஓட்டினார்கள். தான் கர்ப்பமாக இருப்பதால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் என தங்கமயில் தப்பு கணக்கு போட, நிலைமை அப்படியே உல்டா ஆனது. அவர் ஆசை ஆசையாக சென்று தான் கர்ப்பமாக இருப்பதை சரவணனிடம் சொல்ல, அவரோ இது யாரோட குழந்தை என கேட்டு அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதனால் சரவணனுக்கு டைவர்ஸ் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார் தங்கமயில். இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கதிர் - ராஜி பக்கம் திரும்பிய கதைக்களம்
இந்த வாரமும் தங்கமயில் மற்றும் சரவணன் மோதல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கதிர் - ராஜி பக்கம் கதைக்களம் திரும்பி இருக்கிறது. ஐபிஎஸ் எக்ஸாமிற்காக கோச்சிங் செல்லும் ராஜி, கதிரிடம் தனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது கனவு என ஃபீல் பண்ணி சொல்கிறார். அதற்கு கதிர், அதுக்காக நீ ஏதாச்சும் முயற்சி பண்ணீருக்கியா என கேட்கிறார். அவரின் இந்த கேள்வியால் கோபமடையும் ராஜி, தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்க ஆரம்பிக்கிறார்.
ராஜியை தேடும் கதிர்
இதையடுத்து மறுதினம் காலையில் கதிர் எழுந்து பார்க்கிறார். அப்போது தன் அருகில் படுத்திருந்த ராஜியை காணவில்லை. உடனே பதறியடித்துக் கொண்டு வெளியே செல்ல, அங்கிருந்த தனது அம்மாச்சியிடம் ராஜி எங்க போனா என விசாரிக்கிறார் கதிர். அவர், அவ காலையிலேயே எழுந்து டிரெயினிங்கு போயிட்டா, நீயும் அவகூட எழுந்து போயிருப்பனு நினைச்சேன் என சொல்கிறார். என்னது டிரெயினிங்கா என ஷாக் ஆகும் கதிர், வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிரவுண்டுக்கு செல்கிறார். அங்கு பார்த்தால் ராஜி, ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த கதிர் வாயடைத்துப் போகிறார்.
ராஜியை விழுந்து விழுந்து கவனிக்கும் கதிர்
பின்னர் ராஜியிடம் பேசும் கதிர், ஏன் என்னைய எழுப்பாம நீ இங்க வந்துட்ட என கேட்க, அதற்கு ராஜி நீ தான சொன்ன நான் எந்த முயற்சியும் பண்ணாம, இருக்கேன்னு, இதுக்கப்புறம் பாரு நான் என்னவெல்லாம் பண்ணப் போகிறேன் என்று, சொல்ல, பின்னர் கதிர், ராஜிக்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்யத் தொடங்குகிறார். இப்படி கதிர், ராஜியின் கனவை நனவாக்க அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறார் என்பதை தான் இந்த புரோமோவில் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

