- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Thangamayi Bold Decision Vows to Raise Child Alone : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த தனது அம்மாவிற்கு தங்கமயில் மரண அடி கொடுத்துள்ளார்.

Thangamayil Vows to Raise Child Alone
Thangamayi Bold Decision Vows to Raise Child Alone : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் சொல்ல, அவரோ அந்த குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாத கணக்கில் நான் உன்னை விட்டு பிரிந்திருக்கும் போது எப்படி குழந்தை? இது யாரோட குழந்தை என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கமயில் மன வேதனையுடன் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 733ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Pandian Stores 2 Serial
தங்கமயில் தனது அறைக்கு சென்று கதவை தாழிட்ட நிலையில், என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள பாக்கியம் ஆவலாக இருந்தார். இதை தொடர்ந்து கதவை தட்டி தங்கமயிலிடம் கேட்ட போது, அவர் நான் மாமாவிடம் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லை என்று கூறவே வா, நாங்கள் கூட வருகிறோம். நீ கர்ப்பமாக இருப்பதாக கூறி உன்னை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருகிறோம். முடியாது, அப்படி இப்படி என்று பேசினால், நேராக போலீஸ் ஸ்டேஷன் போலாம் என்று சொல்லவே, ஆத்திரமடைந்த தங்கமயில் போதும் நிறுத்து.
Vijay TV Serial Pandian Stores 2 Latest Twist
இனிமேல் நீ என்னுடைய வாழ்க்கையில் தலையிட வேண்டாம். நீ எனக்கு பண்ணுனது வரை போதும். உன்னால் நான் அனுபவித்ததும் போதும். இத்தனை நாட்களாக நீ என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றியது வரை போதும். பாக்கியம் பேசியதை தொடர்ந்து மாணிக்கம் பேசினார். இப்படி இருவரும் பேசவே, கோபம் கொண்ட தங்கமயில் இதுவரையில் அப்பாவின் வருமானம் இல்லாமல்தான் 2 குழந்தைகளையும் வளர்ந்தீங்க. அதே மாதிரி நானும் என்னுடைய குழந்தையை அப்பா இல்லாமலேயே வளர்த்துக்குறேன் என்றார்.
Pandian Stores 2 Serial Promo Today Tamil
2 பேர் இருப்பதற்கு இந்த வீட்டிலும் சாப்பாட்டுக்கும் தேவையான காசு நான் கொடுத்துவிடுகிறேன். இந்த வேலை போதாது என்றால் இன்னொரு வேலைக்கு போறேன். ஏனென்றால் எங்கிட்ட போதுமான வருமானம் வருகிறது. அதை வைத்து என்னுடைய குழந்தையை நான் வளர்த்துக் கொள்கிறேன் என்று பேசிவிட்டார். தங்கமயிலுக்கு இப்போது வரை ஆறுதலாக இருப்பது மீனா மட்டுமே தான். ஆனால், இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கும் செந்திலுக்கும் தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Thangamayi Bold Decision in Pandian Stores 2
மீனாவிடம் சென்று என்ன நடந்தது என்று பாக்கியம் கேட்ட போது தங்கமயில் அக்கா அவமானப்பட்ட மாதிரி நீங்களும் அவமானம் பட வேண்டுமே என்று கூறி கோயிலில் நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பாக்கியம் பாண்டியன் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால், மீனா, அவரை தடுத்து நிறுத்தினார். கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருங்கள். நீங்கள் அவமானப்படுத்தின மாதிரி தான் அவர்களும் அவமானப்படுத்துறாங்க. இனிமேல் தங்கமயில் அக்கா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காதீங்க என்றார்.
Bhagyam Plan Against Pandian Family
இதைத் தொடர்ந்து அஞ்சலியை சந்தித்து பேசிய சரவணன் கோயிலில் என்ன நடந்தது என்பது பற்றி எல்லா உண்மைகளையும் சொன்னார். மேலும், தான் பேசியது தவறு என்றும் கூறி வருத்தப்பட்டார். கோபத்தில் என்ன பேசுவது, ஏது பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன் என்றார். அதோடு தங்கமயில் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவள் சொன்னது பொய் தான் என்று அடித்து கூறினார். கடைசியாக தங்கமயில் ஒரு மாத்திரை குறைவாக இருப்பதாக கூறி மீனாவிடம் பேசிக்கிட்டே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சரவணன் மற்றும் அஞ்சலி இருவரும் ஒரு கடையில் கூல்டிரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
Pandian Stores 2 Serial Today Episode
அதோடு அஞ்சலியின் கையை பிடித்து பேசியதையும், பைக்கில் ஒன்றாக சேர்ந்து சென்றதையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.