MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?

Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?

Siragadikka Aasai Serial 09 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் நடைபெறும் வீட்டுக்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 09 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பணத்திற்கு ஆசைப்பட்டு, வீட்டுக்கே தெரியாமல் கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். மேலும் இந்த திருமணம் உங்களுக்கு டைவர்ஸ் ஆகும் முன்பே நடக்க வேண்டும் என கனகாவின் அம்மா கேட்டுக்கொண்டதை அடுத்து, மனோஜும் இந்த திருமணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வீட்டிலேயே நடத்தலாம் என ஐடியா கொடுக்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, திருமணத்திற்கான பூ ஆர்டரை மீனாவுக்கும், சமையல் ஆர்டரை ஸ்ருதிக்கும் கொடுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கல்யாண வேலைகளை செய்யும் முத்து - மீனா
Image Credit : jiohotstar

கல்யாண வேலைகளை செய்யும் முத்து - மீனா

கல்யாண வீட்டில் அலங்கார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் முத்து மற்றும் மீனா ஆகியோரை மணமகளின் தாய் சந்திக்கிறார். அப்போது முத்துவைப் பார்த்ததும் அவருக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. உடனே முத்து, "என்னை நினைவில் இல்லையா? உங்கள் மகள் காணாமல் போனபோது நீங்கள் என் காரில் வந்தீர்கள். அப்போது இருவரும் சேர்ந்து அவரை தேடிக் கண்டுபிடித்தோமே" என்று நினைவூட்டுகிறார். அதன் பிறகே அந்த பெண்ணின் தாய்க்கு முத்து யார் என்பது ஞாபகம் வருகிறது. மறுபுறம், ரவி மற்றும் ஸ்ருதி திருமண விருந்துக்கான உணவுகளை கொண்டு வந்து, அவற்றை மேல்தளத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாற ஏற்பாடு செய்கின்றனர்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!
Related image2
Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்
35
ரோகிணி எண்ட்ரி
Image Credit : jiohotstar

ரோகிணி எண்ட்ரி

அதே நேரத்தில், மணமகளுக்கு மேக்கப் போடுவதற்காக ரோகிணி வருகிறார். ஆரம்பத்தில் மேக்கப் போட மறுக்கும் மணமகளை, "மாப்பிள்ளையை சந்திக்கும் போது அழகாக இருக்க வேண்டும்" என்று சமாதானப்படுத்தி, இறுதியில் மேக்கப் செய்ய வைக்கிறார். இதற்கிடையில் மனோஜ், தனது நண்பருடனும் ஜோதிடருடனும் கனகாவின் வீட்டுக்கு வருகிறார். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு, நேராக அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். மாப்பிள்ளைக்கும் அவரது நண்பருக்கும் காபி கொடுக்குமாறு மணமகளின் தாய் கூறியதால், முதலில் முத்து செல்ல முயற்சிக்கிறார்.

45
ஷாக் ஆன சந்தோஷ்
Image Credit : jiohotstar

ஷாக் ஆன சந்தோஷ்

ஆனால் அங்கிருந்த மற்றொரு பெண், "நானே கொடுத்து விடுகிறேன்" என்று காபியை வாங்கிச் செல்வதால், முத்துவால் மாப்பிள்ளையை நேரில் பார்க்க முடியாமல் போகிறது. அனைவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், சந்தோஷ் மற்றும் ஜீவா திருமண ஏற்பாடுகளைப் பார்ப்பதற்காக கீழே வருகிறார்கள். அப்போது அங்கே முத்து மற்றும் மீனாவை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

55
எஸ்கேப் ஆகப்பார்க்கும் மனோஜ்
Image Credit : jiohotstar

எஸ்கேப் ஆகப்பார்க்கும் மனோஜ்

உடனே அவர்கள் மனோஜ் இருக்கும் அறைக்குச் சென்று, முத்துவும் மீனாவும் அங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். இதைக் கேட்ட மனோஜ் பதற்றமடைந்து, அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, "முதலில் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். அதன்பிறகு என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்" என்று அறிவுறுத்துகின்றனர். இதனால், அடுத்த எபிசோடில் மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா? முத்து அவரை நேருக்கு நேர் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை
Recommended image3
Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!
Recommended image2
Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved