MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!

Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!

Siragadikka Aasai Serial 07 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவின் கல்யாணத்திற்கு தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற சீதாவை அடிவெளுத்துள்ளார் அருண்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 07 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரேகாவும், சத்யாவும் கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு வருகிறார்கள். ரேகா ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு, இந்த வீட்டுல படுக்குறதுக்கு ஒரு கட்டில் கூட இல்லையே என முத்துவும், மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கேட்ட ரேகா, இதுவரை நான் வசதியாக வாழ்ந்தாலும் சந்தோஷமாக இல்லை, ஆனால் இங்க எனக்காக நீங்கெல்லாம் இருக்கீங்க, அதனால எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை தான் புடிச்சிருக்கு என கூறுகிறார்.

Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சீதாவை டார்ச்சர் பண்ணும் அருண்
Image Credit : jiohotstar

சீதாவை டார்ச்சர் பண்ணும் அருண்

சீதா தன்னுடைய தம்பி சத்யாவின் கல்யாணம் முடிந்ததால் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அருண், சீதா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். ஏனெனில் குலதெய்வம் கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு, கல்யாணத்துக்கு போயிட்டு வந்த சீதாவுக்கு கோபத்தில் கன்னத்திலேயே பளார் என அறைவிடுகிறார். அருண் அடித்ததில் சீதாவுக்கு இரத்தம் வருகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய மனைவியை அடிச்சு டார்ச்சர் பண்ணுகிறார் அருண். அவரின் இந்த அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறார் சீதா.

Related Articles

Related image1
Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!
Related image2
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
35
ஸ்ருதிக்கு கிடைத்த கல்யாண ஆர்டர்
Image Credit : jiohotstar

ஸ்ருதிக்கு கிடைத்த கல்யாண ஆர்டர்

மறுபுறம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு கனகாவின் அம்மா மேனகா வருகிறார். அவர் தன்னுடைய மகள் கனகாவின் திருமணத்திற்காக உணவு ஆர்டர் கொடுக்க வந்திருக்கிறார். பேப்பர்ல தான் உங்க ஹோட்டலோட விளம்பரத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் தான் என் பொண்ணோட கல்யாணத்துக்கு ஆர்டர் கொடுக்க வந்தேன். வீட்டிலேயே சிம்பிளா பண்றோம், 25 பேர் தான் வருவாங்க, அதனால நீங்க தான் அந்த பங்க்‌ஷனுக்கு நல்லபடியா, உணவு டெலிவரி செய்ய வேண்டும் என கேட்கிறார் மேனகா.

45
மீனாவுக்கும் சிபாரிசு செய்த ஸ்ருதி
Image Credit : jiohotstar

மீனாவுக்கும் சிபாரிசு செய்த ஸ்ருதி

அந்த நேரம் பார்த்து மீனா, பூ கொடுப்பதற்காக அங்கு வருகிறார். அப்போது கனகாவின் அம்மாவிடம், பூ அலங்காரத்திற்கு, இவங்களிடம் ஆர்டர் கொடுங்க, கம்மி ரேட்ல, நல்லா பண்ணுவாங்க என சிபாரிசு செய்கிறார். அதற்கு கனகாவின் அம்மா மேனகாவும் ஓகே சொல்லிவிடுகிறார். பின்னர் அவர்கள் இருவரிடமும் அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார் மேனகா. அந்த நேரத்தில் ரோகிணியும் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அவர் மீனாவிடம், தான் டைவர்ஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்த விஷயத்தை சொல்கிறார்.

55
ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி
Image Credit : jiohotstar

ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி

சீக்கிரமா மனோஜை 5 லட்சத்தை கொடுக்க சொன்னீங்கனா, அந்த பணத்தை வாங்கிட்டு நான் ஊரைவிட்டே போயிடுவேன் என சொல்கிறார். ரோகிணி பணக்கஷ்டத்தில் இருப்பதை உணர்ந்த ஸ்ருதி, அங்கு வந்திருந்த கனவாவின் அம்மா மேனகாவிடமே, பொண்ணுக்கு மேக் அப் போடும் ஆர்டரை பெற்றுக் கொடுக்கிறார். இறுதியாக வீட்டில் இருக்கும் விஜயா, மனோஜிடம் நாளைக்கு கோவிலுக்கு போகணும் என சொல்கிறார். நாளை தான் கல்யாணம் என்பதால், மனோஜ், தனக்கு வேலை இருப்பதாக சாக்குபோக்கு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Recommended image2
Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!
Recommended image3
Pandian Stores 2 : லஞ்சம் வாங்கிய செந்திலை பிளாக்மெயில் பண்ணும் மீனா... தேர்வில் பாஸ் ஆனாரா ராஜி?
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!
Recommended image2
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved