- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Siragadikka Aasai Serial 06 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னைமீறி தன் மகளை திருமணம் செய்து வைத்த மீனாவுக்கு சிந்தாமணி சாபம் விட்டுள்ளார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகா சத்யாவின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அதனை தடுக்க வந்து பல்பு வாங்கிய சிந்தாமணி, ஊருக்கு போக மனமில்லாமல், மறுபடியும் ரேகாவிடம் வந்து பேசி அவரை சமாதானப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் ரேகா மனமிறங்க மறுக்கிறார். சிந்தாமணி தன் மகளிடம் கதறுவதைப் பார்த்து விஜயா மிகுந்த உற்சாகமடைகிறார். இதை தான் நான் எதிர்பார்த்தேன் என அருகில் இருந்த தன்னுடைய தோழி பார்வதியிடம் சொல்லி சிரிக்கிறார். ரேகா நம்ம என்ன சொன்னாலும் வர மாட்டா என்பதை புரிந்துகொண்ட சிந்தாமணி, அவருக்கு சாபம் விட்டுட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்
மனோஜுக்கு ஐஸ் வைத்த ஜீவா
மறுபுறம் மனோஜ், ரேகா, சத்யாவின் கல்யாணத்துக்கு செல்லாமல் இருக்க, அவரிடம் அந்த கல்யாணத்துக்கு போகலேனா என்ன வர்ற 17ந் தேதி நடக்க இருக்குற உங்களோட கல்யாணத்தை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க என நீயூமராலஜிஸ்ட் கேட்கிறார். அதை நினைத்து இன்னும் பயத்திலேயே இருப்பதாக சொல்கிறார் மனோஜ். அந்த நேரம் பார்த்து ஜீவா அங்கு வருகிறார். ஜீவா லேட்டா வருவதை பார்த்த மனோஜ், ஏன் இவ்வளவு லேட் என மனோஜ் கேட்க, அதற்கு அவர் உங்க பிசினஸ் பெரிய லெவல்ல போகப் போகுது, எதிர்காலத்தில் ஃபாரின் ட்ரிப்பெல்லாம் போக வேண்டியதிருக்கும். அதுக்காக தான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிட்டு வர்றேன் என கூறி ஐஸ் வைக்கிறார் ஜீவா.
கனகா அம்மா கொடுத்த சர்ப்ரைஸ்
அதுமட்டுமின்றி மனோஜ், கல்யாணம் பண்ணுவது தொடர்பாக அறிந்த ஜீவா, அவரை பயமுறுத்தும் வகையில் ஒரு கதையை சொல்கிறார். நான் நேத்து தான் டிவில பார்த்தேன், முதல் மனைவியோடு டைவர்ஸ் ஆகாமலேயே இரண்டாவது கல்யாணம் பண்ணவன, மணமேடையிலேயே வந்து போலீஸ் அரெஸ்ட் பண்ணியதாக ஜீவா சொன்னதும் மனோஜ் பீதியடைகிறார். அந்த நேரம் பார்த்து கனகாவின் அம்மா அங்கு வருகிறார். அவர் மனோஜிடம் 50 ஆயிரம் பணத்தை கொடுத்து, நீங்க டிரெஸ் எடுத்துக்கோங்க, உங்களோட நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுங்க என கூறிவிட்டு செல்கிறார்.
மறுவீட்டுக்கு வந்த ரேகா
உடனே அங்கிருந்த நியூமராலஜிஸ்ட், பார்த்தியா உன்னைத் தேடி பணம் இனிமேல் வரப்போகுது. நீ அதை நினைச்சு கவலைப்படாத, உன் தலைக்கு மேல குரு உட்கார்ந்திருக்கான்னு சொல்லி மனோஜை தேற்றுகிறார். இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, என்ன நடந்தாலும் நீங்க பார்த்துப்பீங்க என கூறுகிறார் மனோஜ். மறுபுறம் கல்யாணம் முடிந்த கையோடு, ரேகாவையும் சத்யாவையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அப்போது ரேகா விளக்கு ஏற்றுகிறார். அங்கு இருப்பவர்கள், ரேகாவை பார்த்து, வசதியா வாழ்ந்த பொண்ணு, இங்க எப்படி இருக்கப் போகுதோ என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

