MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்

Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்

Siragadikka Aasai Serial 02 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை பழிவாங்குவதற்காக ஒரு சகுனி வேலையைப் பார்த்திருக்கிறார் விஜயா.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 02 2026, 08:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவுக்கும் ரேகாவுக்கும் பாட்டி வீட்டில் வைத்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ள முத்து, அதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார். முத்து ஃபேமிலியில் உள்ள அனைவரும் பாட்டி வீட்டில் ஆஜராகி உள்ளனர். மறுபுறம் சிந்தாமணி, தன் மகளின் திருமணம் எங்கு நடக்கிறது என்பது தெரியாமல் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார். கல்யாண பதற்றத்தில் இருக்கும் ரேகாவை கூல்டவுன் பண்ணும் விதமாக அவருக்கு மேக்கப் போட்டு விடுகிறார் ஸ்ருதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜோராக நடக்கும் கல்யாண வேலை
Image Credit : jiohotstar

ஜோராக நடக்கும் கல்யாண வேலை

மறுபுறம் மீனா, தன் கையில் செயின் உடன் வந்து ரேகாவுக்கு போட்டு விடுகிறார். அவசர அவசரமாக கல்யாணம் நடப்பதால், தங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் இந்த செயின் மட்டும் போட்டுவிடுகிறேன் என கூறுகிறார். கல்யாண வேலைகள் பரபரவென நடந்துகொண்டிருக்க, தன்னுடைய தோழி பார்வதி உடன் வெளியே சென்று பேசுகிறார் விஜயா. அப்போது சிந்தாமணிக்கு அப்படி என்ன கோபம், தன்னோட பொண்ணு கல்யாணத்தை பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கல என சொல்கிறார் பார்வதி.

Related Articles

Related image1
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
Related image2
Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா
35
விஜயாவின் ரிவெஞ்ச்
Image Credit : jiohotstar

விஜயாவின் ரிவெஞ்ச்

உடனே விஜயா, சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க போவதில்லைனு யார் சொன்னா என கேட்கிறார். நீ என்ன சொல்ற என பார்வதி கேட்க, அதற்கு விஜயா, அந்த சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க தான் போறா என கூறுகிறார். அவன் என் கூடவே இருந்து எனக்கு துரோகம் பண்ணுனால்ல, அதனால் அவளுக்கு நான் ஒரு பதிலடி கொடுக்கப் போறேன் என சொல்கிறார். என்ன பண்ண போற என பார்வதி கேட்கிறார். பொண்ணுக்கு அவ கூடவே இருந்து அவ கல்யாணத்தை பார்க்க ஆசை இருக்கும்ல, இங்க தாலி கட்டும்போது அந்த சிந்தாமணி இங்க வருவா, அதற்கான ஏற்பாடுகளை செய்யப்போறேன் என கூறுகிறார் விஜயா.

45
சிந்தாமணிக்கு சவால்
Image Credit : jiohotstar

சிந்தாமணிக்கு சவால்

அய்யோ விஜயா கல்யாணம் நடக்குற இடத்துல எதுவும் வில்லங்கத்தை பண்ணிவிட்றாத என பார்வதி சொன்னதும், இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அதுல எந்த பிரச்சனையும் வராது என கூறும் விஜயா, உள்ளே சென்று ரூமில் சத்யா - ரேகா ஆகியோர் மணக்கோலத்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை சிந்தாமணிக்கு அனுப்பிவிடுகிறார். அதைப்பார்த்து ஷாக் ஆன சிந்தாமணி, விஜயாவிடம் போனில் பேசுகிறார். அவரிடம் இந்த கல்யாணம் எங்க நடக்கிறது என்கிற விவரத்தை சொல்லி, முடிஞ்சா தடுத்து பார் என சவால் விடுகிறார் விஜயா.

55
காத்திருக்கும் ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

காத்திருக்கும் ட்விஸ்ட்

இதையடுத்து தன்னுடைய கணவருடன், காரில் கிளம்பி வருகிறார் சிந்தாமணி. அவர் வரும் வழியில் தன்னுடைய மகள் ரேகாவுக்கு போன் போடுகிறார். ஆனால் போனை எடுக்கலாமா வேண்டாமா என ரேகா யோசிக்க, அப்போது அங்கு வரும் விஜயா, அந்த போனை பிடுங்கி, இப்போ எடுத்து பேசுனா பிரச்சனை தான் வரும். அதனால் போனை எடுக்காத என கூறுகிறார். பின்னர் அந்த போனை வாங்கும் ஸ்ருதி, அதனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா
Recommended image2
Pandian Stores 2 : அரசியை மிரட்டிய குமார்... அடிச்சு ஓடவிட்ட பாண்டியன் - சக்திவேல் செய்யும் சூழ்ச்சி என்ன?
Recommended image3
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
Recommended image2
Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved