MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?

Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?

Siragadikka Aasai Serial 29 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக விஜயாவிடம் சொல்லி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 29 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ், தன்னுடைய ஷோரூமிற்கு நியூமராலஜிஸ்டை வரச்சொல்லி, கனகாவின் அம்மா கல்யாணம் பற்றி பேசியதை சொல்கிறார். அதற்கு அந்த நியூமராலஜிஸ்ட், வாழ்க்கையில் சந்தர்ப்பம் தேடி வரும் அதை மிஸ் பண்ணிடவே கூடாது. ரோகிணி உன்னோட கடந்த காலம், அவளை நினைச்சுக்கிட்டு நீ வர்ற வாய்ப்பை தவறவிடக் கூடாதுனு அட்வைஸ் பண்ணுகிறார். இருந்தாலும் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா என மனோஜ் கேட்க, அதற்கு அவர் உன் வாழ்க்கையில் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு நிறைய இருக்கு, அதனால் உன் வீட்டில் கண்டிப்பா ஒத்துக்குவாங்க என சொல்கிறார்.

Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முத்து போடும் பிளான்
Image Credit : jiohotstar

முத்து போடும் பிளான்

இதனால் மனோஜும் அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். மறுபுறம் வீட்டில் முத்து தன்னுடைய தந்தை அண்ணாமலையை அழைத்து, ரேகாவுக்கும், சத்யாவுக்கும் பாட்டி ஊர்லயே வச்சு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு, முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார். அப்போது அருகில் இருந்த விஜயா, அதைக்கேட்டதும் மிகுந்த உற்சாகம் அடைகிறார். அந்த கல்யாணத்துக்கு நானும் வர்றேன் என சொல்கிறார். மீனா வீட்டு கல்யாணம் தான் நீ வரமாட்டியே என அண்ணாமலை கேட்க, மீனா யாரு, நம்மவீட்டு பொண்ணு தான் என சொல்லி ஷாக் கொடுக்கிறார் விஜயா.

Related Articles

Related image1
Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Related image2
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
36
விஜயாவிடம் கல்யாண மேட்டரை சொன்ன மனோஜ்
Image Credit : jiohotstar

விஜயாவிடம் கல்யாண மேட்டரை சொன்ன மனோஜ்

விஜயா பாசத்தோடு, அந்த கல்யாணத்திற்கு செல்லவில்லை. சிந்தாமணியின் பொண்ணு ரேகா, அந்த வெறும் பைய சத்யாவை கல்யாணம் பண்ணிக்கணும், அதைப்பார்த்து சிந்தாமணி வயிறு எரியணும் என்கிற நோக்கத்தில் தான் கல்யாணத்துக்கு செல்ல சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படி இவர்கள் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து பப்பரப்பா மனோஜ் எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது அங்கிருந்த தன்னுடைய அம்மாவிடம், சந்தோஷ் தனக்காக ஒரு கோடீஸ்வர வீட்டு பெண்ணை பார்த்திருப்பதாக சொல்கிறார்.

46
கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா
Image Credit : jiohotstar

கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா

அதற்கு விஜயாவும் ஓகே சொல்ல, ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. அவளுக்கு மனநிலை சரியில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அவளுக்கு மனநலம் சரியாகிடும் என சொல்கிறார். உடனே விஜயா, அவரிடம் 108 தேங்காய் வாங்கிட்டு வா என சொல்கிறார். எனக்கு பொண்ணு கிடைச்சதுனா 108 தேங்காய் உடைக்குறேன்னு வேண்டிக்கிட்டீங்களா என கேட்கிறார். இல்ல இந்த ஐடியாவை கொடுத்த உன்னோட ஃபிரெண்டு மண்டைல உடைக்குறதுக்கு என சொல்வதோடு, நான் எக்காரணத்தை கொண்டும் இந்த சம்மதத்துக்கு ஒத்துக்க மாட்டேன் என கூறிவிடுகிறார்.

56
அருணிடம் சிக்கிய சீதா
Image Credit : jiohotstar

அருணிடம் சிக்கிய சீதா

மறுபுறம் சீதா தன்னுடைய கணவரிடம் தாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு முத்துவின் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர் மீது சந்தேகப்பட்ட அருண், அவரை பின் தொடர்ந்து வந்துவிடுகிறார். அப்போது அவர் அங்கு வருவதை அறிந்த சீதா, அங்கிருந்த ரேகாவையும், சத்யாவையும் ஒரு ரூமில் ஒளிந்துகொள்ளச் சொல்கிறார். பின்னர் வழக்கம்போல் சீதாவிடம் சண்டைபோட்டுவிட்டு செல்கிறார் அருண்.

66
ரோகிணியை சந்திக்கும் விஜயா
Image Credit : jiohotstar

ரோகிணியை சந்திக்கும் விஜயா

இறுதியாக, ரோகிணி, பார்வதி வீட்டில் அமர்ந்திருக்க, அப்போது அவர் விஜயாவுக்கு போன் போட்டு வரச் சொல்கிறார். ஏனெனில் ரோகிணி டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துவிட்டதால், அதைப்பற்றி பேச தான் விஜயாவை அங்கு வரச் சொல்லி இருக்கிறார். அங்கு வந்த விஜயா, ரோகிணியை பார்த்ததும் அவரை திட்டித்தீர்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved