MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்

Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்

Siragadikka Aasai Serial 27 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு வந்த ரோகிணி, குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 27 2026, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் தன் மகளை தங்களிடம் ஒப்படைத்துவிடுமாறு கூறி நேற்று விஜயாவின் வீடு தேடி சென்று பிரச்சனை செய்தார் சிந்தாமணி. அவர் அடியாட்களுடன் வந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடியதால், வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதையடுத்து வீட்டுக்கு வந்து தன் கணவரிடம் அழுது புலம்புகிறார் சிந்தாமணி. இத்தனை வருஷமா என் பொண்ணு கூட இருக்க முடியாம போச்சு, இனிமேலாச்சும் சந்தோஷமாக இருக்கலாம்னு பார்த்தேன். இப்போ இப்படி பண்ணுறாங்களே என ஃபீல் பண்ணுகிறார். பின்னர் சிந்தாமணியின் கணவர் போலீசுக்கு போன் போட்டு தங்கள் மகள் இருக்கும் இடத்தை எப்படியாவது கண்டுபிடித்து சொல்லுமாறு கேட்டிருக்கிறார்.

Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சத்யா கல்யாணத்தில் ட்விஸ்ட்
Image Credit : jiohotstar

சத்யா கல்யாணத்தில் ட்விஸ்ட்

மறுபுறம் முத்துவும், மீனாவும் சந்திரா வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு போய் சிந்தாமணி பிரச்சனை பண்ணிய விஷயத்தை சொல்லும் முத்து, இதுக்கு மேலேயும் அவர்கள் முன்னிலையில் சத்யா - ரேகாவை திருமணத்தை நடத்த முடியாது. அதனால் எங்க பாட்டிகிட்ட பேசிட்டேன். அவங்க ஊர்லயே வச்சு கல்யாணத்தை முடிச்சிடலாம் என கூறுகிறார் முத்து. பின்னர் சீதாவுக்கு போன் போட்டு வர சொல்கிறார். அவர் சத்யா கல்யாணத்துக்கு போறேன்னு சொன்னா அருண் விடமாட்டார் என்பதால், குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வருவதாக சொல்கிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : கிரிஷுக்காக மனம்மாறிய ரோகிணி... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு நாள் குறித்த முத்து..!
Related image2
Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?
35
நியூமராலஜிஸ்ட் கணிப்பு
Image Credit : jiohotstar

நியூமராலஜிஸ்ட் கணிப்பு

இதையடுத்து மனோஜின் ஷோரூமிற்கு நியூமராலஜிஸ்ட் வருகிறார். அவரிடம் நீங்க சொன்னபடி நான் கோடீஸ்வரன் ஆகப்போகிறேன். ஆனால் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும் என கூறுகிறார் அந்த ஜோதிடர். இதையடுத்து தனக்கு டைவர்ஸ் கிடைப்பதில் இழுபறி நீடிப்பதாக சொல்லும் மனோஜ், அதற்கு என்ன செய்யலாம் என அவரிடம் கேட்க, அவரும், உங்களுக்கு கண்டிப்பா டைவர்ஸ் கிடைத்துவிடும். ரோகிணியே வந்து உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்குறேன்னு சொல்லுவார் என கூறிவிட்டு செல்கிறார்.

45
டைவர்ஸுக்கு ஓகே சொன்ன ரோகிணி
Image Credit : jiohotstar

டைவர்ஸுக்கு ஓகே சொன்ன ரோகிணி

பின்னர் நியூமராலஜிஸ்ட் கிளம்பி சென்ற அடுத்த நிமிடமே ரோகிணி, மனோஜின் ஷோரூமிற்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் உள்ளே வந்ததும், 5 லட்சம் பணம் எப்ப தருவ என கேட்கிறார். அதற்கு மனோஜ் டைம் ஆகும் என சொல்ல, நீ கொடுத்தால், உடனே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டுவிடுகிறேன் என கூறுகிறார். இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என மனோஜ் கேட்க, என்னுடைய பையனோட எதிர்காலத்துக்காக நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என கூறுகிறார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி செல்கிறார் ரோகிணி.

55
நியூமராலஜிஸ்ட் கேட்ட உதவி
Image Credit : jiohotstar

நியூமராலஜிஸ்ட் கேட்ட உதவி

மறுபுறம் விஜயா, இரவில் மனோஜுக்காக வீட்டில் காத்திருக்க, டயர்டாக வரும் மனோஜ், ஏன்மா இவ்வளவு நேரம் தூங்காம முழிச்சிருக்கீங்க என கேட்க, உனக்காக தான் டா காத்திருக்கேன் என கூறுகிறார். மறுநாள் கடைக்கு அந்த நியூமராலஜிஸ்ட் திரும்ப வருகிறார். அவரிடம் நீங்க சொன்னபடி ரோகிணி எனக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துவிட்டார் என கூறுகிறார் மனோஜ். பின்னர் அந்த நியூமராலஜிஸ்ட், மனோஜிடம் நீங்கள் என்னைப்பற்றி பேசி சோசியல் மீடியாவில் பதிவிட வேண்டும் என கூறுகிறார். அதற்கு மனோஜும் ஓகே சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!
Recommended image2
Top 10 Tamil Serial : சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக TRP ரேஸில் குதித்த ஜீ தமிழ் சீரியல்... இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Recommended image3
Pandian Stores 2 : லஞ்சம் வாங்கியது அம்பலம்... அதிகாரிகளிடம் எஸ்கேப் ஆகி மீனாவிடம் மாட்டிக்கொண்ட செந்தில்..!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : கிரிஷுக்காக மனம்மாறிய ரோகிணி... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு நாள் குறித்த முத்து..!
Recommended image2
Siragadikka Aasai : மனோஜுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் உடன் வந்த வரன்... டைவர்ஸ் கொடுப்பாரா ரோகிணி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved