MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா

Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா

Siragadikka Aasai Serial 01 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்காக முத்துவிடம் பணத்தை ரெடி பண்ண சொல்லி உள்ளார் விஜயா. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 01 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துள்ள ரோகிணி, அதற்கு ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார். அது என்னவென்றால், மனோஜ் சிறையில் இருந்தபோது அவரை வெளியே எடுக்க தான் செலவு செய்த 5 லட்சம் ரூபாயை தன்னிடம் திருப்பி கொடுத்தால், உடனே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என கூறிவிடுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 : அரசியை மிரட்டிய குமார்... அடிச்சு ஓடவிட்ட பாண்டியன் - சக்திவேல் செய்யும் சூழ்ச்சி என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உதவ மறுக்கும் முத்து
Image Credit : jiohotstar

உதவ மறுக்கும் முத்து

மனோஜ் ரோகிணிக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சத்தையும், விஜயா மனசாட்சியே இல்லாம முத்து - மீனாவிடம் கேட்கிறார். ஆனால் முத்து, தன்னால் தற்போது வாங்கிய கடனையே கட்ட முடியாமல் திணறுகிறேன். என்னால இந்த 5 லட்சத்தை ரெடி பண்ண முடியாது என சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து மனோஜ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் உள்ளே வந்ததும் எனக்காக யாரும் பணம் கொடுக்க வேண்டாம், நானே பணத்தை ரெடி பண்ணிருவேன் என மனோஜ் சொன்னதும், இதை முத்து - மீனா சொல்லிருந்தா நம்பிருப்பேன், நீ சொன்னதை நம்ப முடியல என கூறுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?
Related image2
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
35
மனோஜிடம் சத்தியம் வாங்கிய முத்து
Image Credit : jiohotstar

மனோஜிடம் சத்தியம் வாங்கிய முத்து

இதையடுத்து மனோஜ், தான் தனக்கு தெரிந்தவர்களிடம் காசு கேட்டிருக்கேன். அவங்க கொடுக்குறேன்னு சொல்லிருக்காங்க என சொல்கிறார். இதைக்கேட்டதும் முத்துவுக்கு மனோஜ் மீது சந்தேகம் வருகிறது. இவன் எங்க மறுபடியும் எங்கயாச்சும் கடன் வாங்கி, நம்மள சிக்கலில் மாட்டிவிட்டிருவானோ என பயப்படுகிறார் முத்து. நான் எந்த சிக்கல்லையும் மாட்டிவிட மாட்டேன்னு உன் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுடா என மனோஜிடம் கேட்கிறார் முத்து. இதையடுத்து மனோஜும் தலையில் அடித்து சத்தியம் பண்ணுகிறார்.

45
ரவி - ஸ்ருதி செய்த உதவி
Image Credit : jiohotstar

ரவி - ஸ்ருதி செய்த உதவி

மறுபுறம் சத்யா - ரேகா கல்யாணத்துக்கு பணம் தேவைப்படுவதால், என்ன செய்வதென்று தெரியாமல், முத்துவும் மீனாவும் முழிக்கிறார்கள். அப்போது ரவியும், ஸ்ருதியும் வந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கிறார்கள். இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இதுக்கு அப்புறம் மாச மாசம் லோன் கட்ட நாங்களும் பணம் கொடுக்கிறோம் என கூறுகிறார்கள். இதனால் முத்துவுக்கும், மீனாவுக்கும் கொஞ்சம் பாரம் குறைகிறது. பின்னர் இருவரும் கிளம்பி ஸ்போகன் இங்கிலீஷ் கிளாஸுக்கு செல்கிறார்கள்.

55
ஸ்வேதாவிடம் புரபோஸ் பண்ணிய மிஷ்ரா
Image Credit : jiohotstar

ஸ்வேதாவிடம் புரபோஸ் பண்ணிய மிஷ்ரா

அங்கு சென்றதும் சத்யாவுக்கும் ரேகாவுக்கும் கல்யாணம் நடக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஸ்வேதா, காதலை பற்றி என்ன நினைக்குறீர்கள் என்பதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என சொல்ல, உடனே மிஷ்ரா எழுந்து சென்று ஸ்வேதாவிடம் காதலை சொல்லிவிடுகிறார். இதனால் கோபமடையும் ஸ்வேதா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். மறுபுறம் சத்யா - ரேகாவின் கல்யாண வேலைகள் நாச்சியார் வீட்டில் தடபுடலாக நடக்கிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : அரசியை மிரட்டிய குமார்... அடிச்சு ஓடவிட்ட பாண்டியன் - சக்திவேல் செய்யும் சூழ்ச்சி என்ன?
Recommended image2
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?
Recommended image2
Siragadikka Aasai : திட்டித்தீர்த்த விஜயா... திருப்பி அடித்த ரோகிணி - ரெண்டு பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மனோஜ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved