- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!
Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!
Siragadikka Aasai Serial 04 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல், கனகாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி சத்யாவுக்கு, சிந்தாமணியின் மகள் ரேகாவுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார் முத்து. இந்த திருமணம் சிந்தாமணிக்கு தெரியாமல், முத்துவின் பாட்டி வீட்டில் வைத்து நடக்கிறது. இந்த திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த, திருமணம் நடக்கும் இடத்தை சிந்தாமணிக்கு சொல்லிவிடுகிறார் விஜயா. இதையடுத்து, சிந்தாமணி தன்னுடைய கணவருடன் கிளம்பி, ரேகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Pandian Stores 2 : லஞ்சம் வாங்கிய செந்திலை பிளாக்மெயில் பண்ணும் மீனா... தேர்வில் பாஸ் ஆனாரா ராஜி?
அரிவாள் உடன் வந்த சிந்தாமணி
ஆனால் சிந்தாமணி வரும் முன்பே சத்யா, ரேகா கழுத்தில் தாலியை கட்டிவிடுகிறார். பின்னர் சிந்தாமணி உள்ளே வந்து பார்க்கையில் தன் மகள் ரேகா கழுத்தில் தாலியோடு மணமேடையில் அமர்ந்திருக்கிறார். இதைப்பார்த்து கடுப்பான சிந்தாமணி, கோபத்தில், தன்னுடைய காரில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, ரேகாவையும், சத்யாவை வெட்ட பாய்கிறார். அப்போது முத்து, அவரை தடுத்து நிறுத்தி, அவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி கீழே போடுகிறார். இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
கனகா வீட்டிற்கு செல்லும் மனோஜ்
மறுபுறம் மனோஜ், முதன்முறையாக கனகாவின் வீட்டிற்கு செல்கிறார். அவருடன் ஜோதிடரும் உடன் சென்றிருக்கிறார். இதையடுத்து, மனோஜிடம் தனியாக பேசும் கனகாவின் அம்மா, உங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதமா என கேட்க, அதற்கு அவர், சம்மதம் தான் ஆனால் அதற்கு முன் நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என கேட்கிறார். கனகாவின் அம்மாவும், நீங்க எந்த உதவியா இருந்தாலும் தயங்காம கேளுங்க, நான் செய்யுறேன் என கூறுகிறார். அப்போது தான் தனக்கு பணம் தேவைப்படும் விஷயத்தை சொல்கிறார்.
கல்யாணத்துக்கு கனகா அம்மா போட்ட கண்டிஷன்
நீங்கள் கல்யாணத்துக்கு முன் 10 லட்சம் கொடுத்தால், நான் ரோகிணிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து டைவர்ஸ் வாங்கிவிடுவேன் என கூறுகிறார். அதற்கு ஓகே சொல்லும் கனகாவின் அம்மா, அந்த பணத்தை நீங்கள் என் மகள் கழுத்தில் தாலி கட்டினால் தான் தருவேன் என கூறுகிறார். பின்னர் மனோஜ், நான் டைவர்ஸ் வாங்குவதற்கு முன் உங்கள் மகள் கழுத்தில் தாலி கட்டினால், பிரச்சனை ஆகிவிடும். அதனால் முன்கூட்டியே பணத்தை கொடுங்க, கண்டிப்பா உங்க பொண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறுகிறார்.
வசமா சிக்கப்போகும் மனோஜ்
அப்போது தன்னுடைய ஜோதிடரிடம் ஆலோசிக்கும் மனோஜ், வேறுவழியின்றி கல்யாணத்தை ரகசியமாக வீட்டிலேயே முடிக்க முடிவெடுக்கிறார். அநேகமாக விஜயாவுக்கே தெரியாமல் தான் இந்த திருமணத்தை மனோஜ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெறும் முன்னரே மனோஜ் இரண்டாம் திருமணம் செய்வதால், அதன்மூலம் கண்டிப்பாக சிக்கலில் சிக்குவார் என யூகிக்கப்படுகிறது. இதுவே அவருக்கு விவாகரத்து கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் செம ட்விஸ்ட் காத்திருக்கு.

