MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • லஞ்சம் வாங்கிய செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீனாவுக்கு வந்த டவுட் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

லஞ்சம் வாங்கிய செந்திலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீனாவுக்கு வந்த டவுட் - அனல்பறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் தன்னுடைய மாமனார் பேச்சைக் கேட்டு லஞ்சம் வாங்கி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் அரசு வேலையில் இருந்தாலும் அவர் நேர்மையாக வேலை பார்த்து வருவதால் அவரால் சம்பாதிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த செந்திலின் மாமனார், அவரை அடிக்கடி அழைத்து, லஞ்சம் வாங்கினால் தான் அரசு வேலை பார்ப்பவர்கள் முன்னேற முடியும் என தூண்டிவிடும்படி பேசி இருந்தார். ஒருகட்டத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கும் டாக்குமெண்டில் சீக்கிரம் கையெழுத்து வாங்கி கொடுத்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும் என சொல்ல, செந்திலும் அவரிடம் லஞ்சம் வாங்கி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

25
பதறும் செந்தில்
Image Credit : jiohotstar

பதறும் செந்தில்

செந்தில் முதல்முறையா லஞ்சம் வாங்கியதால் அவருக்கு கை, கால் எல்லாம் நடுங்குகிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் செந்தில் வெடவெடத்துப் போக, அந்நேரத்தில் மீனாவின் அப்பாவிடம் இருந்து போன் வருகிறது. அவர் எல்லாம் முடிஞ்சிருச்சா, நான் சொல்லி வச்ச ஆளு வந்து பணம் கொடுத்துட்டாரா என விசாரிக்கிறார். அவரிடம் பணம் வாங்கிய விஷயத்தை செந்தில் சொல்ல, அவரும் சந்தோஷப்படுகிறார். இருப்பினும் செந்திலுக்கு பதற்றம் குறைந்தபாடில்லை. அதே பதற்றத்துடன் நடுங்கிக் கொண்டே செந்தில் வீட்டிற்கு வருகிறார்.

Related Articles

Related image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Related image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
35
சந்தேகப்படும் மீனா
Image Credit : jiohotstar

சந்தேகப்படும் மீனா

செந்தில் வரும் போது அவரைப் பார்த்த மீனாவுக்கு அவர் மீது சந்தேகம் வருகிறது. என்ன எதையோ திருடிட்டு வர்ற மாதிரி, இப்படி வேர்த்து விறுவிறுத்து வர்றீங்க என மீனா கேட்டதும், என்ன சொல்வதென்று தெரியாமல் செந்தில் முழித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்திலேயே மீனாவின் அம்மாவும், அப்பாவும் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த பின்னர் செந்தில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புகிறார். அதன்பின்னர் மீனாவின் தந்தை செந்திலிடம் இப்படி தான் பணம் சம்பாதிக்கணும் என புத்திமதி சொல்கிறார்.

45
செந்திலை தூண்டிவிடும் மாமனார்
Image Credit : jiohotstar

செந்திலை தூண்டிவிடும் மாமனார்

இது பத்தாது தொடர்ந்து லஞ்சம் வாங்கச் சொல்லி செந்திலை ஊக்கப்படுத்துகிறார் மீனாவின் தந்தை. மறுபுறம் ராஜியின் அட்ராசிட்டி தான் காட்டப்படுகிறது. அவர் ஐஏஎஸ் தேர்வுக்காக விழுவிழுந்து படிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் ராஜி தன்னுடைய ரூமில் கதிர் தூங்குவதால், அவரை டிஸ்டர்ப் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக மொபைல் வெளிச்சத்திலேயே படித்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

55
ராஜியின் அட்ராசிட்டி
Image Credit : jiohotstar

ராஜியின் அட்ராசிட்டி

திடீரென இரவில் கண்விழித்து பார்க்கும் கதிர், இருட்டில் ராஜியை பார்த்ததும் அய்யய்யோ பேய் என பயப்படுகிறார். அதன்பின்னர் லைட்டை போடும் ராஜி, நான் தான் பயப்படாதீங்க என சொல்கிறார். இதைப்பார்த்த கதிர், அடேங்கப்பா இந்த அளவுக்கு படிக்குறியா, என்னால உன்னோட படிப்பு கெட்டுப் போக வேண்டாம், நீ லைட்டை போட்டுக்கிட்டே படி என சொல்கிறார். பின்னர் ராஜியும் லைட்டை போட்டு விடிய விடிய படித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்த டார்கெட் விஜயா... ரோகிணியின் சகுனி வேலை ஸ்டார்ட் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image3
வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Related Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved