- Home
- Cinema
- தொலைக்காட்சி
- லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கோமதியிடம் சொல்ல ஒரு பக்கா பிளான் போட்டிருக்கிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் சொல்லி மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர் தனது ஆதங்கத்தை மீனாவிடம் கொட்டி இருக்கிறார். தான் மாமாவை வேறு ஒரு பொண்ணுடன் பார்த்த விஷயத்தையும் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார். பின்னர் அங்கு வரும் செந்திலிடம் ஜாடைமாடையாக பேசி திட்டுகிறார் மீனா. அவரும் இவ எதுக்காக நம்மளை திட்டுறா என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஃபீல் பண்ணும் காந்திமதி
இன்றைய எபிசோடில் எல்லோருமே குடும்பமாக உட்கார்ந்துகொண்டு பாண்டியன் - கோமதி இடையேயான சண்டையை பற்றி பேசுகிறார்கள். இவங்க பண்றதெல்லாம் ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என சொல்லி காந்திமதி ஃபீல் பண்ணுகிறார். இருந்தாலும் கோமதி அடங்காமல் தன் சண்டையை தொடர்கிறார். மறுபுறம் மீனா தன்னுடைய தோழியை சந்தித்து பேசுகிறார். அப்போது தங்கமயில் ரொம்ப நல்லா வேலை பார்ப்பதாக சொல்லி பாராட்டுகிறார். இதைக்கேட்ட மீனா சந்தோஷப்படுகிறார். அப்போது அந்த பெண், மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் உன்னோட மாமியார் வீட்டுக்கு தெரியுமா என கேட்கிறார்.
கோபித்துக்கொண்ட கோமதி
அதற்கு மீனா இல்லை என சொல்கிறார். இதெல்லாம் வீட்டில் சொல்ல வேண்டாமா என தோழி கேட்க, மீனாவும் சரி நான் என்னுடைய மாமியார்கிட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்கிறேன் என கூறுகிறார். பின்னர் வீட்டுக்கு மீனா சென்றபோது, பாண்டியன் - கோமதி சண்டையை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது யதார்த்தமாக தங்கமயில் பற்றி பேசுகிறார் மீனா. இதைக்கேட்டு கடுப்பான கோமதி, அவளைப் பத்தி இங்க எதுக்கு பேசுற என சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். தங்கமயில் பேரை சொன்னதுக்கே இப்படி கோபப்படுறாங்களே இவங்க கிட்ட எப்படி சொல்றது என யோசிக்கிறார் மீனா.
மீனா போடும் பிளான்
அப்போது அவருக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது. அதன்படி, தங்கமயிலையும், கோமதியையும் சந்திக்க வைத்து இந்த விஷயத்தை சொல்லிவிடலாம் என திட்டம்போடுகிறார் மீனா. இருவரையும் கோவிலில் சந்திக்க வைத்து, தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல சொல்லலாம் என பிளான் போட்டிருக்கிறார் மீனா. இதற்காக கோமதியிடம் நாளைக்கு கோவிலுக்கு வாங்க என அழைத்திருக்கிறார் மீனா. அங்கு தங்கமயிலை பார்த்ததும் கோமதி கடுப்பாவாரா? இல்லை அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தெரிந்துகொள்வாரா என்பது புரியாத புதிராக உள்ளது.
லஞ்சம் வாங்கும் செந்தில்
இறுதியாக செந்தில் ஆபிஸில் லஞ்சம் வாங்குவதை காட்டுகிறார்கள். டாக்குமெண்டில் விரைவாக கையெழுத்து வாங்கிக் கொடுக்க ஒரு நபர் அவருக்கு ஒரு கட்டு பணத்தை லஞ்சமாக கொடுக்கிறார். இதை வாங்கியதும் செந்திலுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போகிறது. தன்னுடைய மாமனார் பேச்சைக் கேட்டு தான் செந்தில் லஞ்சம் வாங்க தொடங்கி இருக்கிறார். இதனால் நிச்சயம் அவர் பிரச்சனையில் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்த விஷயம் மீனாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

