MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Gandhimathi Staying at Pandian House is it Right or Wrong Analysis : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியின் அம்மா காந்திமதி தனது மருமகன் வீட்டிலேயே டேரா போட்ட நிலையில் இதை வைத்து எப்போது பூகம்பம் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 10 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
முத்துவேல் vs பாண்டியன் குடும்பப் பிரச்சனை
Image Credit : jiohotstar

முத்துவேல் vs பாண்டியன் குடும்பப் பிரச்சனை

Gandhimathi Staying at Pandian House is it Right or Wrong Analysis : நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இதில் ஆரம்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்த நிலையில் இப்போது ஒவ்வொருவரும் எதிரும் புதிருமாகவே இருக்கிறார்கள். ஒரு பஞ்சாயத்து என்று வரும் போது கூட பிறந்த பிறப்புக்கு ஓடி சென்று உதவி செய்தது முதல், அதே உறவு தனக்கே தெரியாமல் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார் என்று வரும் போது பூகம்பம் வெடித்தது வரை எல்லாமே பரபரப்பாக சென்றது.

27
Muthuvel vs Pandian latest family problem
Image Credit : jiohotstar

Muthuvel vs Pandian latest family problem

இது ஒரு புறம் இருந்தாலும், குமரவேல் மற்றும் அரசி இருவரும் காதலிக்க ஆரம்பித்து பிறகு சுதாரித்துக் கொண்ட அரசி வேறொருவரை திருமணம் செய்யும் மன நிலை வரை சென்றார். திருமணத்திற்கு முந்தைய நாள் அரசியை கடத்திச் சென்ற குமரவேல் பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலுவிற்கும் தனக்கும் திருமணமாகிவிட்டதாக கூறி முத்துவேல் மற்றும் சக்திவேல் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.

37
Gandhimathi's real face in Pandian Stores 2
Image Credit : jiohotstar

Gandhimathi's real face in Pandian Stores 2

இதெல்லாம் குமரவேலுவை பழிவாங்க தான் என்பது அப்புறமாகத்தான் தெரிய வந்தது. கடைசியில் தனது அண்ணனுக்காக அரசி எல்லா உண்மைகளையும் சொல்லவே பாண்டியன் தனது மகள் அரசியை மன்னித்து வீட்டிற்கு கூட்டிச் சென்றார். அதன் பிறகு சரவணன் மற்றும் தங்கமயில் பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு வரை சென்றது. இதைத் தொடர்ந்து தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சரவணன் கூறியுள்ளார்.

47
Pandian Stores 2 Serial Today Episode Review March 10
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode Review March 10

இதற்கிடையில் கதிருக்கும், ராஜீக்கும் திருமணம் செய்து வைத்தது கோமதி தான் என்று தெரிந்து முத்துவேல் சக்திவேல் பிரச்சனையை ஏற்படுத்தவே, பாண்டியனுக்கும், கோமதிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு பாண்டியன் தனது மனைவி கூட பேசுவதே இல்லை. இந்த நிலையில் தான் குமரவேலுவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமணத்திற்கு நிச்சயமும் செய்ய தயார் செய்யப்பட்டது.

57
Is it right for mother-in-law to stay at son-in-law house?
Image Credit : jiohotstar

Is it right for mother-in-law to stay at son-in-law house?

ஆனால், குமரவேலுவிற்கு அரசி மீது இருந்த காதல் காரணமாக இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை. இதைப் பற்றி நன்கு அறிந்த காந்திமதி பெண் வீட்டாரிடம் சென்று குமரவேல் மற்றும் அரசியை பற்றி எடுத்து சொல்லி இந்த திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த செய்தார். பெண் வீட்டாரும் அதன்படியே செய்யவே சக்திவேல், பெண் வீட்டாரிடம் இதை பற்றி விசாரிக்க, உங்களது அம்மா தான் அப்படி சொன்னார்கள் என்று எல்லா உண்மைகளையும் பெண் வீட்டார் சொல்லிவிட்டனர்.

67
Pandian Stores 2 Gandhimathi and Muthuvel Clash
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Gandhimathi and Muthuvel Clash

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது அம்மா என்று கூட பாரக்காமல் வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த கோமதி, தனது அம்மாவை தன்னுடைய வீட்டிற்கே கூட்டிக் கொண்டு சென்றார். எப்போதும் தனது அம்மா தன்னுடைய வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கோமதிக்கு அந்த ஆசை நிறைவேறியது.

77
Gandhimathi vs Gomathi
Image Credit : jiohotstar

Gandhimathi vs Gomathi

ஆனால், பெத்த மகன்கள் இருக்கும் போது ஒரு மாமியாராக காந்திமதி மருமகன் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. ஏனென்றால் பெற்றோர்களை கடைசி வரை தனது வீட்டில் தன்னுடன் வைத்து பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு மகனின் கடமை. ஆனால், மகன்கள் பக்கத்திலேயே இருக்கும் போது மகளின் வீட்டில் அம்மா இருப்பது அவ்வளவு நல்லதில்லை என்பது ஒவ்வொரு ரசிகர்களின் கருத்தும் எண்ணமுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Recommended image2
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Recommended image3
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved