- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாட்டியின் பிளானை கேட்டு அரண்டுபோன அரசி... கடும் அப்செட்டில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாட்டியின் பிளானை கேட்டு அரண்டுபோன அரசி... கடும் அப்செட்டில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி வீட்டில் டேரா போட்டுள்ள காந்திமதி, அரசியை வைத்து ஒரு பிளான் போட்டிருக்கிறார். அது என்ன திட்டம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கோமதியிடம் தெரியப்படுத்த திட்டமிட்ட மீனா, தங்கமயிலை போன் போட்டு கோவிலுக்கு வரச் சொல்லிவிட்டு, இவரும் தன்னுடைய மாமியார் கோமதி உடன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தங்கமயில் அம்மாவுடன் வந்திருப்பதை பார்த்து ஷாக் ஆன மீனா, இவங்கள எதுக்கு கூட்டிட்டு வந்த, எதாச்சும் பிரச்சனை ஆகிடும் என சொல்ல, பின்னர் மயிலை மட்டும் தனியாக அழைத்துச் சென்று கோமதி முன் நிறுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
திட்டுவாங்கிய மீனா
தங்கமயிலை பார்த்ததும் கடுப்பான கோமதி, அவரை திட்ட, அதைக்கேட்ட பாக்கியம் அங்கு வந்து கோமதியிடம் சண்டைபோடுகிறார். இதனால் ஷாக் ஆன மீனா, அய்யய்யோ எப்படியாச்சும் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கோமதியிடம் சொல்லிவிடலாம்னு பார்த்தால், இந்த பாக்கியம் எல்லா பிளானையும் சொதப்பிடுச்சே என வருந்துகிறார். எல்லா தப்பையும் பண்ணிட்டு, தெனாவெட்டா வந்து கோமதியிடம் சண்டைபோட்டால் கோமதி சும்மா இருப்பாரா, அவரும் தன் பங்கிற்கு திட்டுகிறார். இந்த பிரச்சனையால் தங்கமயில் சொல்ல வந்ததை கேட்காமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் கோமதி.
மீனா கடும் அப்செட்
கோமதி மட்டுமின்றி தங்கமயிலும் மீனாவை திட்டிவிட்டு செல்கிறார். எதுக்காக இப்படியெல்லாம் பண்ற, இப்போ பாரு உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். நல்லது பண்ண நினைச்ச நம்மளையே ரெண்டு பேரும் திட்டுட்டு போறாங்களே என கடும் கோபத்தில் இருக்கிறார் மீனா. இதையடுத்து வீட்டுக்கு வரும் மீனா, இனிமே யார் பஞ்சாயத்துக்கும் போகக்கூடாது என முடிவெடுக்கிறார். வீட்டுக்கு வந்த தன் கணவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார் மீனா.
சமாதானம் பேசும் காந்திமதி
மறுபுறம் காந்திமதி, வீட்டில் பாண்டியனை அழைத்து பேசுகிறார். ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுக்கிறீங்க, சமாதானமா பேசுங்க என சொல்கிறார். ஆனால் பாண்டியன் சமாதானமாகவில்லை. கோமதி மீது அதே கோபத்தோடு தான் இருக்கிறார். அதெல்லாம் அவளை மன்னிக்க முடியாது என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிடுகிறார். கோமதி பண்ணிவச்ச கல்யாணத்துக்கே, இவரு இம்புட்டு கோபப்படுறாரே, இனிமே நம்ம நடத்தி வைக்கப்போற கல்யாணத்துக்கு என்னவெல்லாம் பிரச்சனை பண்ணப்போறாரோ என காந்திமதி சொல்ல, அதை அருகில் இருந்த அரசி கேட்டுவிடுகிறார்.
அரசிக்கு அதிர்ச்சி கொடுத்த பாட்டி
அதன்பின்னர் காந்திமதி, உனக்கும் குமாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன் என தன்னுடைய மனசில் இருக்கும் பிளானை சொல்லிவிடுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன அரசி, நான் அந்த குமாரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எங்க அப்பாகிட்ட இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க பெரிய பிரச்சனையாகிடும் என சொல்லிவிட்டு செல்கிறார். அநேகமாக பாட்டியால் பாண்டியன் வீட்டில் மிகப்பெரிய பூகம்பம் விரைவில் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

