MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!

குரு பகவானுக்கு பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.! சொத்துக்கள் குவியும்.!

Guru Bhagavan Favourite Zodiac Signs : நவகிரகங்களில் சுப கிரகமாக கருதப்படும் குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்று சில உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 14 2026, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Guru Bhagavan Favourite Zodiac Signs
Image Credit : Asianet News

Guru Bhagavan Favourite Zodiac Signs

ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். ‘குரு பார்க்க கோடி புண்ணியம் கிடைக்கும்’ என்பது நம்பிக்கை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு பெயர்ச்சியாகும் பொழுது 12 ராசிக்காரர்களுக்கும் அதிகப்படியான நற்பலன்களை வாரி வழங்குவார். ஆனால் ஜோதிடத்தின் படி குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் என்று சில உள்ளன. இந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் எப்போதும் நன்மைகளை மட்டுமே அவர் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

25
கடகம்
Image Credit : AI Generated

கடகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி கடக ராசி குரு பகவானின் உச்ச வீடாகும். அதாவது தனது முழு பலத்தையும் குரு பகவான் கடக ராசியில் வெளிப்படுத்துகிறார். சந்திரன் அதிபதியாக இருக்கும் கடக ராசியில் குரு அமரும் போது கஜகேசரி ராஜயோகம் போன்ற வலிமையான ராஜயோகங்களும் உருவாகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே இருக்கும். நிர்வாகத் திறமை, தலைமைப் பண்புகள் இயல்பிலேயே இருக்கும். சொத்து சேர்க்கை போன்றவை எளிதாக கிடைக்கும். குருவின் ஆசி இவர்களுக்கு பாதுகாப்பு கவசம் போல செயல்படும்.

Related Articles

Related image1
1 வருடத்திற்குப் பின் மேஷ ராசியில் குடியேறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு வங்கி இருப்பு உயரும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!
Related image2
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!
35
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

ஜோதிடத்தில் குரு மற்றும் செவ்வாய்க்கு இடையே நட்பு உள்ளது. இவை இரண்டும் நட்பு கிரகங்களாக கருதப்படுகிறது. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் செவ்வாய் மற்றும் குருவுக்கு இடையே இருக்கும் நட்பு பலமானது. குருவுக்கு விருச்சிக ராசி நட்பு வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவான் விடாமுயற்சியையும், துணிச்சலையும் அளிப்பார். ரகசியமான விஷயங்களை கண்டுபிடிப்பதிலும், மருத்துவத் துறையிலும் இவர்கள் குருவின் அருளால் ஜொலிப்பார்கள். தொழில் மற்றும் வேலையில் சிறந்து விளங்குவார்கள்.

45
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசி குரு பகவானின் சொந்த ராசியாகும். இது குருவின் ஆட்சி வீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்களாகவும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். குருவின் சொந்த வீடு என்பதால் இவர்களுக்கு எப்போதும் குருவின் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலோ அல்லது தடுமாற்றத்தை சந்தித்தாலோ இறுதியில் குருவின் அருளால் முழுமையான வெற்றி கிடைக்கும். கல்வி மற்றும் ஞானத்தில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

55
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

தனுசுவை போல மீன ராசியும் குரு பகவானின் சொந்த ராசியாகும். இது குருவின் நீர் ராசி என்பதால் இவர்களுக்கு இரக்க குணமும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் அதிகமாக இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு ஆழ்மன சிந்தனை கற்பனைத் திறன் அதிகம். குருவின் ஆதிக்கத்தால் இவர்கள் சமுதாயத்தில் பெரும் மதிப்பையும், மரியாதையும் பெறுவார்கள். பொதுவாக இவர்களுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் வராது.

குரு பகவானின் அருளைப் பெற வழிகள்

குரு பகவானின் அருளைப் பெற வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். மஞ்சள் நிற உணவுகளான கடலைப்பருப்பு சுண்டல், எலுமிச்சை பழ சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். ஏழை எளியவர்கள், இயலாதவர்கள், ஏழை மாணவர்களுக்கு உதவுவது குரு பகவானின் அருளைப் பெற்றுத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
குரு பெயர்ச்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!
Recommended image2
இரு தினங்களில் மீன சங்கராந்தி.! இந்த 5 ராசிகளின் கஷ்டகாலம் முடிவுக்கு வரும்.! வாழ்வில் வசந்தம் வீசும்.!
Recommended image3
Daily Rasi Palan : மார்ச் 13-ல் இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பண மழையுடன் நல்ல செய்திகள் வந்து சேரும்.!
Related Stories
Recommended image1
1 வருடத்திற்குப் பின் மேஷ ராசியில் குடியேறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு வங்கி இருப்பு உயரும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!
Recommended image2
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved