MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிஎஸ்கே-வுக்கு ஷாக் கொடுத்த சன் டிவி! ஜெயிலர் மற்றும் கூலி இசை விவகாரம்;சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சிஎஸ்கே-வுக்கு ஷாக் கொடுத்த சன் டிவி! ஜெயிலர் மற்றும் கூலி இசை விவகாரம்;சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Sun TV Files Case Against CSK For Music Copyrights : ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக இப்போது திரையரங்கு மற்றும் கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் கடுமையான சட்டப் போராட்டம் வெடித்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 13 2026, 08:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
IPL 2026 Matches
Image Credit : Getty

IPL 2026 Matches

ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு முன்பே, திரையரங்கு மற்றும் கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையே ஒரு சட்டப் போராட்டம் வெடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய விளம்பரம், சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற இசையைப் பயன்படுத்தியதால் இந்தச் சிக்கல் எழுந்துள்ளது.

26
1. காப்புரிமை சிக்கலில் சிஎஸ்கே (CSK)
Image Credit : Facebook

1. காப்புரிமை சிக்கலில் சிஎஸ்கே (CSK)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளங்கள் (எக்ஸ், இன்ஸ்டாகிரம், ஃபேஸ்புக்) மற்றும் விளம்பரங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' (Jailer), ஜெயிலர் (Jailer 2) மற்றும் கூலி (Coolie) ஆகிய படங்களின் பின்னணி இசையை (BGM) பயன்படுத்திய நிலையில் இப்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தப் படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான இந்தப் படங்களில் இசை இந்த படங்களின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

36
2. சன் டிவியின் அதிரடி வழக்கு
Image Credit : Poster

2. சன் டிவியின் அதிரடி வழக்கு

ஜெயிலர், ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய படங்களின் இசையை தங்களது அனுமதியின்றி, வணிக ரீதியான விளம்பரங்களுக்குத் பயன்படுத்தியது காப்புரிமை சட்டத்திற்கு (Copyright Act) எதிரானது என்று சன் டிவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிலேயும் ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ரஜினியின் ஃபேவரைட் டயலாக்கான, 'ஹுக்கும்' (Hukuum) மற்றும் 'கூலி' படத்தின் டீசர் இசை ஆகியவை சிஎஸ்கே வீடியோக்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இசையின் மூலமாக கிடைத்த வருமானம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், தங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டிருந்தது.

ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!

46
3. நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?
Image Credit : facebook

3. நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிஎஸ்கே அணிக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த 3 படங்களின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அந்த வீடியோவை முழுமையாக நீக்கிவிட்டது.

சோலி முடிஞ்சு! ரூ.120 கோடி டீல் கேன்சல்; ஜன நாயகன் படத்தை கைவிட்ட அமேசான் பிரைம்? அதிர்ச்சியில் படக்குழு!

56
Sun Pictures Copyright case on Chennai Super Kings,
Image Credit : Getty

Sun Pictures Copyright case on Chennai Super Kings,

அதோடு, இனி வரும் நாட்களில் அனுமதி பெறாமல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான படங்களின் இசையை அணி நிர்வாகம் பயன்படுத்தாது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதே போன்று சன் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட வீடியோ நீக்கப்பட்டுவிட்டது என்று உறுதியளித்தார். எனினும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முறையான அனுமதி இல்லாமல் சிஎஸ்கே சமூக வலைதளம் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தவில்லை என்ற அறிக்கையுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

66
SUN TV Files Case Against CSK For Using Jailer Jailer 2 and Coolie Music
Image Credit : CSK Twitter

SUN TV Files Case Against CSK For Using Jailer Jailer 2 and Coolie Music

அதோடு இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது. ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் அனைத்துக் கால சிறந்த ஆடும் லெவன்
இந்தியன் பிரீமியர் லீக்
விளையாட்டு
சினிமா
சன் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
சோலி முடிஞ்சு! ரூ.120 கோடி டீல் கேன்சல்; ஜன நாயகன் படத்தை கைவிட்ட அமேசான் பிரைம்? அதிர்ச்சியில் படக்குழு!
Recommended image2
ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!
Recommended image3
ஃபர்ஸ்ட் போஸ்டர்லயே 3 பொண்ணுங்க! கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்! சிரிப்பலையில் ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved