MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்.. கொதிக்கும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

ஐபிஎல் மற்றும் தென்னாப்பிரிக்க லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் இந்திய அணிகள், இங்கு மட்டும் ஏன் இந்த முடிவை எடுத்தன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 12 2026, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்
Image Credit : Getty

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்

இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சகோதர அணியான இந்த சன்ரைசர்ஸ் லீட்ஸ், காவ்யா மாறனின் சன் குழுமத்திற்கு சொந்தமானது.

 பொதுவாக, இந்திய அணி உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை டி20 லீக்குகளில் எடுப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், இந்த எழுதப்படாத விதியை மீறி காவ்யா மாறனின் அணி, பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் காவ்யா மாறனுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

24
அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்தனர்
Image Credit : Getty

அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்தனர்

இந்த ஏலத்தில், டிரென்ட் ராக்கெட்ஸ் அணியுடன் நடந்த கடும் போட்டிக்குப் பிறகு, 27 வயதான அப்ரார் அகமதை சுமார் ₹2.34 கோடிக்கு (£190,000) சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது. இந்த ஏலத்தில் காவ்யா மாறனும் கலந்துகொண்டார். பாகிஸ்தானுக்காக 46 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரார், சமீபத்தில் நடந்த 2026 டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

Related Articles

Related image1
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
Related image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
34
காவ்யா மாறனுக்கு குவியும் கண்டனம்
Image Credit : Instagram

காவ்யா மாறனுக்கு குவியும் கண்டனம்

சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் சிஇஓ காவ்யா மாறன் உரிமையாளராக உள்ள ஒரு அணி, பாகிஸ்தான் வீரரை வாங்கியிருப்பது இந்திய ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்தியாவை தொடர்ந்து கிண்டல் செய்யும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய உரிமையாளர்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டும்?" என்பதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது.

44
பாகிஸ்தான் வீரர்கள் தவிர்க்கப்படுவார்களா?
Image Credit : Getty

பாகிஸ்தான் வீரர்கள் தவிர்க்கப்படுவார்களா?

ஐபிஎல் மற்றும் தென்னாப்பிரிக்க லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்த்து வரும் இந்திய அணிகள், இங்கு மட்டும் ஏன் இந்த முடிவை எடுத்தன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். '

தி ஹன்ட்ரட்' தொடரில் இந்திய ஃபிரான்சைஸ்கள் அணிகளை வாங்கியதால், பாகிஸ்தான் வீரர்கள் தவிர்க்கப்படுவார்கள் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகுபாடற்ற ஏலம் நடத்தப்படும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சஞ்சு சாம்சனை மறைத்தாரா சுப்மன் கில்? டி20 உலகக்கோப்பை படத்தால் சர்ச்சை.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்!
Recommended image2
தேசியக் கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்ட்யா?.. போலீசில் புகார்.. சட்டம் சொல்வது என்ன?
Recommended image3
வெறும் கால்களில் 14 கிமீ..! அண்ணாமலையாருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய அணி வீரர்கள்..
Related Stories
Recommended image1
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved