MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!

T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!

T20 World Cup: Abhishek Sharma: அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைத்த கேப்டன் சூர்யகுமார் அவரை இன்று விளையாட வைத்தார். ஆனால் தனது விக்கெட்டை எளிதில் தாரை வார்த்தார்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 22 2026, 11:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணி படுதோல்வி
Image Credit : Getty

இந்திய அணி படுதோல்வி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெறிம் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அபிஷேக் சர்மா மீண்டும் படுமோசம்
Image Credit : X/BCCI

அபிஷேக் சர்மா மீண்டும் படுமோசம்

கேப்டன் சூர்யகுமார் யாதவ், இளம் வீரர்கள் இஷான் கிஷன், திலக் வர்மா சொதப்பினார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மாவும் வெறும் 15 ரன்னில் அவுட்ட்டாகி மீண்டும் ஒருமுறை தனது விக்கெட்டை எளிதில் பறிகொடுத்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் டக் அவுட் ஆனார். பின்பு நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளில் டக் அவுட் ஆனார்.

34
கேப்டன் நம்பிக்கையை இழந்த அபிஷேக்
Image Credit : Getty

கேப்டன் நம்பிக்கையை இழந்த அபிஷேக்

இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைத்த கேப்டன் சூர்யகுமார் அவரை இன்று விளையாட வைத்தார். ஆனால் அபிஷேக் தனது விக்கெட்டை எளிதில் தாரை வார்த்தார். இந்திய அணி அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் வரும் 26 ம்தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

44
அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்
Image Credit : Getty

அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்

இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி விடும். ஆகவே முக்கியமான இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடியாக நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று 15 ரன்கள் எடுத்த அபிஷேக், முந்தைய மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அவர் நான்கு போட்டிகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், ஒரு போட்டியில் ஆடிய சஞ்சு 22 ரன்கள் எடுத்துள்ளார். ஆகவே சஞ்சுவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Related Stories
Recommended image1
IND VS SA: 'மில்லர் கில்லர்' மரண அடி.. டோட்டலாக சரண்டர் ஆன இந்தியா.. தென்னாப்பிரிக்கா மாஸ் வெற்றி!
Recommended image2
எதிரணிகளை அலற விடும் யார்க்கர் கிங்.. டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved