- Home
- Sports
- IND VS SA: 'மில்லர் கில்லர்' மரண அடி.. டோட்டலாக சரண்டர் ஆன இந்தியா.. தென்னாப்பிரிக்கா மாஸ் வெற்றி!
IND VS SA: 'மில்லர் கில்லர்' மரண அடி.. டோட்டலாக சரண்டர் ஆன இந்தியா.. தென்னாப்பிரிக்கா மாஸ் வெற்றி!
டி20 உலகக்கோப்பையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் மூன்றும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணமாகும்.
தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அதிரடியில் வெளுத்து வாங்கிய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 63 ரன்கள் விளாசினார். டிவால்ட் பிரேவிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 எடுத்தார்.
இந்தியா பேட்டிங்கில் தடுமாற்றம்
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷனின் விக்கெட்டை இந்தியா இழந்தது. மார்கோ ஜான்சனின் பந்தில் ரியான் ரிக்கெல்டனிடம் கேட்ச் கொடுத்து கிஷன் ஆட்டமிழந்தார்.
அபிஷேக் சர்மா மீண்டும் சொதப்பல்
அடுத்த பந்திலேயே திலக் வர்மாவும் (1) வெளியேறினார். ஜான்சன் பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றபோது, விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் கேட்ச் ஆனார். அபிஷேம் சர்மாவும் (15) மீண்டும் ஒரு முறை சொதப்பினார். அக்சர் படேலுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த வாஷிங்டன் சுந்தர் (11) ஏமாற்றமளித்தார். கேப்டன் சூர்யகுமாரும் (18) போஷ் பந்தில் வீழ்ந்தார். இந்தியா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரே ஓவரில் 3 விக்கெட்
15-வது ஓவரில் கேசவ் மகாராஜ் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா (18), ரிங்கு சிங் (0), அர்ஷ்தீப் சிங் (0) ஆகியோரை அவர் தூக்கினார். ஷிவம் துபேயின் (37 பந்தில் 42 ரன்) ஆட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. 19-வது ஓவரில் துபே மற்றும் பும்ரா (0) ஆட்டமிழந்ததால் இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. சூப்பர் அரை சதம் விளாசிய டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணியின் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் மூன்றும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணமாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

