- Home
- Sports
- Sports Cricket
- அபிஷேக் சர்மா இதை செய்யாவிட்டால் SA போட்டியிலும் 'டக்' தான்.. ஆருடம் சொன்ன ஜாம்பவான்!
அபிஷேக் சர்மா இதை செய்யாவிட்டால் SA போட்டியிலும் 'டக்' தான்.. ஆருடம் சொன்ன ஜாம்பவான்!
T20 World Cup 2026: தன்னுடைய முதல் டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அபிஷேக் சர்மா இதுவரை 1 ரன் கூட அடிக்கவில்லை. அவரது மோசமான பார்ம் இந்திய அணியில் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.

அபிஷேக் சர்மாவின் மோசமான பார்ம்
டி20 உலகக்கோப்பையில் நேற்று நெதர்லாந்தை எளிதில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றில் வரும் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பலம்வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணியில் அபிஷேக் சர்மாவின் பார்ம் கவலையளிக்கிறது.
அவர் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து என தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தன்னுடைய முதல் டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா இதுவரை ஒரு ரன் கூட அடிக்கவில்லை.
அபிஷேக் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அட்வைஸ்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அபிஷேக் சர்மா முதலில் ஒரு ரன் எடுக்க பழக வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ''அபிஷேக் ஷர்மா ஒரு அருமையான வீரர். ஆனால் எதிர்பார்ப்புகள் அவருக்கு சுமையாக இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்காவுக்கு எதிராக அவர் நன்றாகத் தொடங்கியிருந்தால், அது வேறுவிதமாக இருந்திருக்கும். இப்போது, அவர் பெரிய சிக்ஸர் அடிப்பவர் மற்றும் சிறந்த பேட்டர் என்ற அழுத்தம் தெரிகிறது.
ஒரு ரன் எடுத்து பழக வேண்டும்
அபிஷேக் சர்மாவின் ஷாட் வரம்பிற்கு, அவர் களத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டும். தனது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க முயற்சிக்கக் கூடாது. பெரிய ஷாட்கள் வந்தால் சரி. ஆனால், அவர் வலுக்கட்டாயமாக குறுக்குவாட்டில் பெரிய ஷாட்களை ஆடக்கூடாது. ஒரு சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்க வேண்டும். நான்கு டாட் பால்கள் கூட ஒரு பொருட்டல்ல. அவற்றை பின்னர் ஈடுசெய்ய முடியும்.
புத்திசாலித்தனம் அவசியம்
ஆரம்பத்தில் அவர் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் நிலைபெற்ற பிறகு, தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். சிங்கிள் ரொட்டேட் செய்யாமல் இருந்தால் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது கடினம். ஆகவே முதலில், ரன் கணக்கைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு பேட்டரும் அந்த முதல் ரன்னை விரும்புகிறார்கள். அதை அவர் பெற்றுவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.

