MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs SA சூப்பர் 8.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? மீண்டும் வரும் சஞ்சு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

IND vs SA சூப்பர் 8.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? மீண்டும் வரும் சஞ்சு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டியில் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா நீக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 19 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி
Image Credit : Getty

இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 போட்டி

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை வரும் 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அதிரடியாக நீக்கப்படும் அபிஷேக் சர்மா
Image Credit : Getty

அதிரடியாக நீக்கப்படும் அபிஷேக் சர்மா

இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்பதே இப்போது பேச்சாக உள்ளது. இந்திய அணியில் அதிரடி மாற்றமாக சிக்சர் மன்னன் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

டி20 உலகக்கோப்பையில் இவரால் தான் இந்திய அணி 300 ரன்களை கடக்கப்போகிறது என ரசிகர்கள் பயர் விட்டு வந்த நிலையில், அனைவரையும் ஏமாற்றிய அபிஷேக் சர்மா அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து என தான் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் டக் அவுட்டாகியுள்ளார்.

35
சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு
Image Credit : Getty

சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு

தனது முதல் டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா இதுவரை ஒரு ரன் கூட அடிக்கவில்லை. கெத்தாக பேட்டை தூக்கிக்கொண்டு களத்துக்கு வரும் அவர் முதல் ஓவரிலேயே அவுட்டாகி நடையை கட்டி விடுகிறார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவால் களமிறங்காத அபிஷேக் சர்மா, மனரீதியாகவும் சோர்வாக உள்ளார். 

ஆகவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அவருக்கு ஓய்வு அளித்து விட்டு, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் களமிறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அபிஷேக் சர்மா விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் (Sanju Samson) மீண்டும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

45
2 மெயின் பாஸ்ட் பவுலர்கள் இடம்பெறலாம்
Image Credit : X@bcci

2 மெயின் பாஸ்ட் பவுலர்கள் இடம்பெறலாம்

மற்றபடி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் களம் கண்ட தமிழக வீர வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அகமதாபாத் மைதானம் வேகத்துக்கும் கைகொடுக்கும் என்பதால் பும்ராவுடன், அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணி பிளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
Recommended image2
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image3
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
0,0,0.. அபிஷேக் சர்மா ஹாட்ரிக் 'டக்' அவுட்.. ஒரு ரன் கூட அடிக்கல.. மிகப்பெரிய பலவீனம் அம்பலம்!
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved