MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 0,0,0.. அபிஷேக் சர்மா ஹாட்ரிக் 'டக்' அவுட்.. ஒரு ரன் கூட அடிக்கல.. மிகப்பெரிய பலவீனம் அம்பலம்!

0,0,0.. அபிஷேக் சர்மா ஹாட்ரிக் 'டக்' அவுட்.. ஒரு ரன் கூட அடிக்கல.. மிகப்பெரிய பலவீனம் அம்பலம்!

அபிஷேக் சர்மாவின் பலமே அவரது அதிரடி பேட்டிங் தான். முதல் பந்தில் இருந்தே சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கி எதிரணி பவுலர்களுக்கு பயம் காட்டுவார். ஆனால் இப்போது அதிரடியே அவருக்கு பலவீனமாக அமைந்துள்ளது. 

2 Min read
Author : Rayar r
Published : Feb 18 2026, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அபிஷேக் சர்மா டக் அவுட்
Image Credit : Getty

அபிஷேக் சர்மா டக் அவுட்

டி20 உலகக்கோப்பையில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி அபிஷேக் சர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட் ஆனார்.

24
டி20 உலகக்கோப்பையில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை
Image Credit : X/BCCI

டி20 உலகக்கோப்பையில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை

அதாவது நெதர்லாந்து ஸ்பின்னர் ஆர்யன் தத் வீசிய முதல் ஓவரின் 3 பந்துகளை ஸ்டோக் வைத்த அபிஷேக் சர்மா 4வது பந்தில் கிளீன் போல்டானார். ஸ்டெம்ப் நோக்கி வீசப்பட்ட பந்தை நேராக ஆடாமால் கிராஸாக ஷாட் அடிக்க முயனற அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா இதுவரை ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தான் விளையாடிய 3 போட்டிகளிலும் டக் அவுட் ஆகியுள்ளார்.

Related Articles

Related image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Related image2
India vs Netherlands: இந்தியா பேட்டிங்.. பிளேயிங் லெவனில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அதிரடி வீரருக்கு ஓய்வு!
34
3 போட்டிகளில் ஹாட் ரிக் டக் அவுட்
Image Credit : Getty

3 போட்டிகளில் ஹாட் ரிக் டக் அவுட்

அதாவது அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் டக் அவுட் ஆனார். இப்போது நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளில் டக் அவுட்டாகியுள்ளார்.

 நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதிரடியில் பட்டையை கிளப்பிய அபிஷேக் சர்மா டி20 உலகக்கோப்பையிலும் கலக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஏமாற்றம் தான் மிஞ்சியது

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளார் அபிஷேக் சர்மா. இவரின் பலமே அவரது அதிரடி பேட்டிங் தான். முதல் பந்தில் இருந்தே சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கி எதிரணி பவுலர்களுக்கு பயம் காட்டுவார். 

ஆனால் இப்போது அதிரடியே அபிஷேக் சர்மாவுக்கு பலவீனமாக அமைந்துள்ளது. டி20 உலககோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வேகம் மட்டும் போதாது. விவேகமும் இருக்க வேண்டும்.

44
அபிஷேக் சர்மாவின் பலவீனம் இதுதான்
Image Credit : Getty

அபிஷேக் சர்மாவின் பலவீனம் இதுதான்

ஏன் என்றால் எல்லா மைதானங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது. இதை அபிஷேக் சர்மா புரிந்து கொள்ள வேண்டும். அவர் கொஞ்சம் பந்து எப்படி வருகிறது? பிட்ச்சின் தன்மை எப்படி உள்ளது? என்பதை கணித்து பொறுமை காக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அவர் இதையெல்லாம் கணிக்காமல் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என நினைத்து அவசர கதியில் விக்கெட் இழந்து விடுகிறார்.

அபிஷேக் சர்மாவின் இந்த பலவீனத்தை சரியாக புரிந்து கொண்ட எதிரணிகள் அவருக்கு முதல் ஓவரே ஸ்பின்னர்களை போட வைத்து விக்கெட்டை எடுத்து விடுகின்றன. அடுத்து சூப்பர் 8 சுற்றில் முக்கியமான போட்டிகள் உள்ளதால் அபிஷேக் சர்மா பொறுப்புடன் விளையாட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Netherlands: இந்தியா பேட்டிங்.. பிளேயிங் லெவனில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அதிரடி வீரருக்கு ஓய்வு!
Recommended image2
T20 WC: சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. பலம்வாய்ந்த எதிரணிகள்.. முழு அட்டவணை!
Recommended image3
India vs Netherlands: ஸ்பின்னர் அதிரடி நீக்கம்.. தமிழக வீரர் கம்பேக்.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
India vs Netherlands: இந்தியா பேட்டிங்.. பிளேயிங் லெவனில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அதிரடி வீரருக்கு ஓய்வு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved