MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 WC: ஆஸ்திரேலியா மட்டுமல்ல; இலங்கையையும் கதற விட்ட ஜிம்பாப்வே.. அடுத்து இந்தியாவா?

T20 WC: ஆஸ்திரேலியா மட்டுமல்ல; இலங்கையையும் கதற விட்ட ஜிம்பாப்வே.. அடுத்து இந்தியாவா?

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணி இலங்கையை அசால்ட்டாக வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா சிக்சர் மழை பொழிந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 19 2026, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே
Image Credit : Zimbabwe\ICC

இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த ஜிம்பாப்வே இப்போது இலங்கையை அவர்களின் சொந்த மண்ணிலேயே சாய்த்துள்ளது. கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

பதும் நிசங்கா சூப்பர் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசியிருந்த பதும் நிசங்கா 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும் பவன் ரத்நாயக்கே (25 பந்துகளில் 44) குசல் பெரேரா (14 பந்துகளில் 22), குசல் மெண்டிஸ் (20 பந்துகளில் 14) ஆகியோர் கணிசமான பங்களிப்பு செய்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, பிராட் எவன்ஸ், கிரேம் க்ரீமர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 எடுத்து அபார வெற்றி பெற்றது.

23
ஆல்ரவுண்டராக ஜொலித்த சிக்கந்தர் ராசா
Image Credit : X@ICC

ஆல்ரவுண்டராக ஜொலித்த சிக்கந்தர் ராசா

ஜிம்பாப்வே அணி வீரர் பிரையன் பென்னட் 48 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா 26 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார். லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே (3 போட்டிகளில் வெற்றி, 1 போட்டி மழையால் ரத்து) தோல்வியே சந்திக்காமல் மாஸ் காட்டியுள்ளது.

Related Articles

Related image1
டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!
Related image2
IND vs SA சூப்பர் 8.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? மீண்டும் வரும் சஞ்சு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
33
சூப்பர் 8 சுற்றில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
Image Credit : X/ZimCricketv

சூப்பர் 8 சுற்றில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

இந்த போட்டிக்கு பிறகு பேசிய சிக்கந்தர் ராசா, ''நாங்கள் டாஸ் தோற்றபோது நாம் உண்மையாகவே சிறப்பாக விளையாடுகிறோம் என்றால், டாஸ் ஒரு பொருட்டே இல்லை என்று வீரர்களிடம் தெரிவித்தேன். பிங்கர்-ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் பந்து திரும்பவில்லை. ஆகையால் பேட்டிங்கின் போது அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம் என்று முடிவு செய்தோம். 

ஒவ்வொரு சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் பயிற்சி எடுத்துள்ளோம். சரியான நேரத்தில் சரியான வீரர்களைக் களமிறக்க எங்களிடம் தகுதியான நபர்கள் உள்ளனர். தங்கள் பொறுப்புகளில் அவர்கள் சரியாக செயல்படுகின்றனர். சூபப்ர் 8 சுற்றில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்று தெரிவித்தார். ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றில் வரும் 26ம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SA சூப்பர் 8.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? மீண்டும் வரும் சஞ்சு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Recommended image2
Abhishek Sharma: சிக்சர் மன்னனுக்கு என்னாச்சு? டக் அவுட்களில் அபிஷேக் சர்மா மோசமான சாதனை!
Recommended image3
டி20 உலகக்கோப்பை: ஷிவம் துபே சிக்சர் மழை.. வருண் சுழல் வலை.. நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!
Recommended image2
IND vs SA சூப்பர் 8.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? மீண்டும் வரும் சஞ்சு.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved