MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!

டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஜிம்பாப்வே.. கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்தி சாதனை!

AUS vs ZIM: T20 உலக்கோப்பையில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய ஜிம்பாப்வே பலம்வாய்ந்த கங்காருவை சாய்த்துள்ளது.

2 Min read
Author : Rayar A
| Updated : Feb 13 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
Image Credit : Getty

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்தது. 

பின்பு விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆல் அவுட் அனது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டின் ராட்சசனை வீழ்த்துவது இது 2வது முறை

டி20 உலககோப்பையில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 2007ம் ஆண்டு முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்த ஜிம்பாப்வே, இன்று 2வது முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
பேட்டிங்கில் பரிதவித்த ஆஸ்திரேலியா
Image Credit : Getty

பேட்டிங்கில் பரிதவித்த ஆஸ்திரேலியா

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அட்டகாசமாக பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பிரையன் பென்னட் 56 பந்தில் 7 பவுண்டரியுடன் 64 ரன்கள் எடுத்தார். தடிவனாஷே மருமணி 21 பந்தில் 35 ரன், கேப்டன் சிக்கந்தர் ராசா 13 பந்தில் 25 ரன் என அதிரடியாக ஆடினார்கள். ஆஸ்திரேலியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா விக்கெட் வீழ்த்தாது பெரும் பின்னடைவாக அமைந்தது. 

சவாலான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 29 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து பரிதவித்தது. ஜோஷ் இங்கிலீஷ் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடி வீரர்கள் கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் டக் அவுட் ஆனார்கள். கேப்டன் டிராவிஸ் ஹெட்டும் வெறும் 17 ரன்களுக்கு வெளியேறினார்.

ஜிம்பாப்வே அணி சாதனை வெற்றி

ஐந்தாவது விக்கெட்டுக்கு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மாட் ரென்ஷா ஜோடி 77 ரன்கள் எடுத்து நம்பிக்கையை அளித்தது. ஆனால் தட்டுத் தடுமாறி பேட்டிங் செய்த கிளைன் மேக்ஸ்வெல் 31 ரன்களில் காலியானதால் ஆட்டம் ஜிம்பாப்வே பக்கம் வந்தது. காயம் அடைந்த மார்கஸ் ஸ்டோசும் (6) சோபிக்கவிலை.

 அற்புதமாக பேட்டிங் செய்த மேட் ரென்ஷா 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனவுடன் ஆஸ்திரேலியாவின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. அந்த அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. 

ஜிம்பாப்வே அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றும் அட்டகாசமாக இருந்தது. ஜிம்பாப்வே அணி வீரர் பிளெசிங் முஜாரபானி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்தார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image2
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image3
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை.. வருண் 'மிஸ்டரி' ஸ்பின்னில் சிக்கிய நமீபியா.. இந்திய அணி மாபெரும் வெற்றி!
Recommended image2
IND vs NAM: இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved