MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. வருண் 'மிஸ்டரி' ஸ்பின்னில் சிக்கிய நமீபியா.. இந்திய அணி மாபெரும் வெற்றி!

டி20 உலகக்கோப்பை.. வருண் 'மிஸ்டரி' ஸ்பின்னில் சிக்கிய நமீபியா.. இந்திய அணி மாபெரும் வெற்றி!

டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டமும், வருண் சக்கரவர்த்தியின் சுழலும் இந்தியாவுக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளது. 

1 Min read
Author : Rayar A
Published : Feb 12 2026, 11:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா vs நமீபியா
Image Credit : x/Mufaddal Vohra

இந்தியா vs நமீபியா

டி20 உலககோப்பையில் டெல்லியில் நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. 

சிக்சர் மழை பொழிந்த இஷான் கிஷன் வெறும் 20 பந்துகளில் அரை சதம் விளாசி டி20 உலகக்கோப்பையில் அரை சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இந்திய அணி வெற்றி
Image Credit : Getty

இந்திய அணி வெற்றி

இஷான் கிஷன் 6 பவுண்டரிகளையும், 5 சிக்சர்களையும் நொறுக்கினார். அதிரடியில் பட்டையை கிளப்பிய ஹர்திக் பாண்ட்யா 28 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 52 ரன்கள் விளாசினார். பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நமீபியா அணி 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்

அந்த அணி வீரர் லோரன் ஸ்டீன்காம்ப் அதிகப்பட்சமாக 29 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, பும்ரா தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கலக்கிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது வென்றார்.

33
இந்திய அணி குரூப் ஏ பிரிவில் டாப்
Image Credit : X@BCCI

இந்திய அணி குரூப் ஏ பிரிவில் டாப்

குரூப் ஏ பிரிவில் இருக்கும் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியுடன் 3.050 என்ற ரன் ரேட்டுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்ததாக வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Related Stories
Recommended image1
IND vs NAM: சான்ஸ் மேல சான்ஸ்.. திருந்தாத சஞ்சு சாம்சன்.. டீம விட்டு தூக்குங்க.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Recommended image2
IND vs NAM: இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved