MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs NAM: சான்ஸ் மேல சான்ஸ்.. திருந்தாத சஞ்சு சாம்சன்.. டீம விட்டு தூக்குங்க.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

IND vs NAM: சான்ஸ் மேல சான்ஸ்.. திருந்தாத சஞ்சு சாம்சன்.. டீம விட்டு தூக்குங்க.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சொதப்பினார். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 12 2026, 08:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்பல்
Image Credit : Getty

சஞ்சு சாம்சன் மீண்டும் சொதப்பல்

டி20 உலககோப்பையில் இந்தியா, நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், மீண்டும் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்திலும் தனது வாய்ப்பை வீணடித்துள்ளார். அதாவது நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

23
3 சிக்சர் அடித்து சஞ்சு சாம்சன் அவுட்
Image Credit : Getty

3 சிக்சர் அடித்து சஞ்சு சாம்சன் அவுட்

நம்பிக்கையுடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு சாம்சன் பென் ஷிகோங்கோவின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து நல்ல நிலையில் இருந்தார். ஆனால் அடுத்த பந்தில் தேவையற்ற ஷாட் ஆடி டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக‌ நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் படுமோசமாக விளையாடியுள்ளார்.

படுமோசமான பார்ம்

பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக சொதப்பினார். அந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட அவர் 25 ரன்களை தாண்டவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் பந்துகளை சரிவர பிடிக்காமல் திணறினார். அதுவும் பவர்பிளே முடிவதற்குள் சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதம் பெரிதும் விவாதப்பொருளானது.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பையில் டாப் 10 கோடீஸ்வர வீரர்கள்.. சஞ்சு சாம்சன் முதல் ஹர்திக் வரை.. முழு லிஸ்ட்!
Related image2
india vs namibia: சஞ்சு சாம்சன் ரீ என்ட்ரி.. சிக்சர் மன்னன் மிஸ்ஸிங்.. இந்தியா முதலில் பேட்டிங்!
33
ரசிகர்கள் ஆத்திரம்
Image Credit : AFP

ரசிகர்கள் ஆத்திரம்

இந்த நிலையில் தான் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் இன்றைய போட்டியில் விளையாட முடியவில்லை. இதனால் தான் சஞ்சு சாம்சஞுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பையும் கோட்டை விட்டு சொதப்பியுள்ளார். 

இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனை வறுத்தெடுத்து வருகின்றனர். ''இவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்? கத்துக்குட்டியான நமீபியாவிடம் தனது விக்கெட்டை தூக்கி கொடுக்கிறார். இவரை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்து வருகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சஞ்சு சாம்சன்
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?
Recommended image2
2027-ல் இந்தியாவுக்கு மரண அடி காத்திருக்கு.. ODI உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது உறுதி.. பாக். கேப்டன் சபதம்
Recommended image3
Sanju Samson: மைதானத்தில் சஞ்சுவின் ஆட்டம்.. கேலரியில் சாருவின் ஆரவாரம்..! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி..!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பையில் டாப் 10 கோடீஸ்வர வீரர்கள்.. சஞ்சு சாம்சன் முதல் ஹர்திக் வரை.. முழு லிஸ்ட்!
Recommended image2
india vs namibia: சஞ்சு சாம்சன் ரீ என்ட்ரி.. சிக்சர் மன்னன் மிஸ்ஸிங்.. இந்தியா முதலில் பேட்டிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved