- Home
- Sports
- Sports Cricket
- T20 உலகக்கோப்பையில் டாப் 10 கோடீஸ்வர வீரர்கள்.. சஞ்சு சாம்சன் முதல் ஹர்திக் வரை.. முழு லிஸ்ட்!
T20 உலகக்கோப்பையில் டாப் 10 கோடீஸ்வர வீரர்கள்.. சஞ்சு சாம்சன் முதல் ஹர்திக் வரை.. முழு லிஸ்ட்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் விளையாடும் வீரர்களில் கோடீஸ்வரர்கள் யார்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.116.2 கோடி ஆகும். ஐபிஎல் மற்றும் பிற டி20 லீக் ஒப்பந்தங்கள் இவரது சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளன.
2. ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட்டின் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. இவரது சொத்து மதிப்பு ரூ.91.3 கோடி. ஐபிஎல் கேப்டன் பதவி மற்றும் விளம்பரங்கள் மூலம் இவரது வருமானம் அதிகரித்துள்ளது.
3. ஜோஸ் பட்லர்
இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 83 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் மற்றும் பிற டி20 லீக்குகளில் விளையாடுவதன் மூலம் இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
4.ஜஸ்பிரித் பும்ரா
உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, பிசிசிஐ-யின் 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.74.7 கோடி. ஐபிஎல் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் இவரது முக்கிய வருமான ஆதாரங்கள் ஆகும்.
5.குயிண்டன் டி காக்
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக், ஐபிஎல் மற்றும் பிற லீக்குகளில் விளையாடுவதன் மூலம் பெரும் அதிக வருமானம் ஈட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.66.4 கோடி ஆகும்.
6. சூர்யகுமார் யாதவ்
இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரூ.66.4 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக சம்பளம் வாங்கும் இவர், ஒரு பெரிய வர்த்தக பிராண்டாகவும் உள்ளார்.
7. இஷான் கிஷன்
இளம் வீரர் இஷான் கிஷன், தனது அதிரடி பேட்டிங் மற்றும் ஐபிஎல் மூலம் குறுகிய காலத்தில் பெரும் சொத்து சேர்த்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.58.1 கோடி ஆகும். வரும் ஆண்டுகளில் பட்டியலில் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
8. சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சனும் ரூ.53.9 கோடியுடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல்-லில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவர். ரசிகர் பட்டாளம் மற்றும் பிராண்ட் மதிப்பு இவரை இந்த பட்டியலில் சேர்த்துள்ளது.
9.டிம் டேவிட்
நவீன கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், பல்வேறு டி20 லீக்குகளின் வருமானம் மூலம் தனது சொத்து மதிப்பை அதிகரித்துள்ளார். ரூ.49.8 கோடிக்கு இவர் அதிபதியாக உள்ளார்.
10. மார்கஸ் ஸ்டோனிஸ்
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ரூ.45.7 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். இவரது நிலையான ஆட்டம் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் பங்களிப்பு இவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

