MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 2006-ல் ஆக்கி.. 2026-ல் கிரிக்கெட்.. 42 வயது சகலகலா வீரர்.. ஆனால் முதல் மேட்ச்சில் நடந்த சோகம்!

2006-ல் ஆக்கி.. 2026-ல் கிரிக்கெட்.. 42 வயது சகலகலா வீரர்.. ஆனால் முதல் மேட்ச்சில் நடந்த சோகம்!

42 வயதான வெய்ன் மேட்சன், இத்தாலி அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; மிகச்சிறந்த ஆக்கி வீரரும் கூட. 

2 Min read
Author : Rayar r
Published : Feb 09 2026, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை 2026
Image Credit : x

டி20 உலகக்கோப்பை 2026

டி20 உலகக்கோப்பையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 9) நடந்த இத்தாலிக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கால்பந்தில் கலக்கில் இத்தாலி முதன்முறையாக டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு ஒரு சோகமான சம்பவம் நடந்தது. அதாவது இத்தாலி கேப்டன் 42 வயதான வெய்ன் மேட்சன் காயம் அடைந்து இருப்பது அந்நாட்டு ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இத்தாலி கேப்டன் வெய்ன் மேட்சன் காயம்
Image Credit : x

இத்தாலி கேப்டன் வெய்ன் மேட்சன் காயம்

அதாவது ஸ்காட்லாந்து இன்னிங்ஸின் நான்காவது ஓவரில், பேட்டர் ஜார்ஜ் முன்சியின் புல் ஷாட்டைத் தடுக்க, வெய்ன் மேட்சன் தனது இடதுபுறம் டைவ் அடித்து பயிற்சி ஆடுகளத்தில் உருண்டபோது, அவரது தோள்பட்டை விலகியது. 

அவர் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்தார், களத்தில் இருந்த துணை ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; ஆக்கி வீரரும் கூட‌

வெய்ன் மேட்சன் காயம் பெரிதாக இருப்பதால் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான் என தகவல்கள் கூறுகின்றன. 42 வயதான வெய்ன் மேட்சன், இத்தாலி அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; ஆக்கி வீரரும் கூட. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்.. வெய்ன் மேட்சன் 2006 ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிள்ளார்.

Related Articles

Related image1
T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!
Related image2
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
33
ஆக்கி உலகக்கோப்பையில் பங்கேற்றார்
Image Credit : Getty

ஆக்கி உலகக்கோப்பையில் பங்கேற்றார்

மேட்சன் தனது 22வது வயதில் தென்னாப்பிரிக்க தேசிய ஹாக்கி அணியில் அறிமுகமானார். தென்னாப்பிரிக்காவுக்காக 39 ஆக்கி போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார். 

கிரிக்கெட் வாழ்க்கையை பொறுத்தவரை வெய்ன் மேட்சன் தனது சிறு வயதில் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் 2009ல் இங்கிலாந்தின் டெர்பிஷையர் அணிக்காக அறிமுகம் ஆனார். தனது முதல் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் 170 ரன்கள் அடித்து அசத்தினார்.

கிரிக்கெட் அறிமுகம் எப்போது?

பின்பு இத்தாலிக்கு குடிபெயர்ந்த அவர் 2023ம் ஆண்டு இத்தாலி தேசிய கிரிக்கெட் அணிக்காக ஜெர்சி அணிக்கு எதிராக தனது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு சூப்பராக விளையாடி அணியில் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.

 இந்த டி20 உலகக்கோப்பையில் இத்தாலி அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்று விட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக தான் விளையாடிய முதல் டி20 உலககோப்பையில் முதல் போட்டியிலேயே காயம் அடைந்து விட்டார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyanka Patil: மன அழுத்தம்.. கடைசில 'அந்த' முடிவு எடுத்தேன்.. மனம் திறந்த ஸ்ரேயங்கா பாட்டீல்!
Recommended image2
Vipraj Nigam: வீரர் செய்த தவறால் 10 ரன்கள் தண்டம் கட்டிய இந்தியா..! யார் இந்த விப்ராஜ் நிகம்
Recommended image3
Vaibhav Sooryavanshi: என்னை சின்ன பையன்னு நினச்சீங்களா..? இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய வைபவ்
Related Stories
Recommended image1
T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!
Recommended image2
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved