MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!

T20 WC IND vs NAM.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. மேட்ச் வின்னர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை வரும் 12ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 09 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
T20 உலகக்கோப்பை 2026
Image Credit : Getty

T20 உலகக்கோப்பை 2026

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து தனியொருவனாக ஆட்டத்தை வெற்றி பெற வைத்தார். 

முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் அதிரடி சூரர்கள் இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோரும் அமெரிக்கா அணியிடம் பெட்டிப் பாம்பாக அடங்கினார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்
Image Credit : Getty

அபிஷேக் சர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 2வது ஆட்டத்தை வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை) நமீபியாவுடன் விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிரடி வீரர் அபிஷேக் சர்மா காய்ச்சலால் அவதிப்படுவதாக கேப்டன் சூர்யகுமார் கூறியிருந்தார். 

அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கத்துக்குட்டியான நமீபியாவுக்கு எதிராக அவருக்கு ஓய்வு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!
Related image2
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
34
முகமது சிராஜ் நீக்கம்
Image Credit : Getty

முகமது சிராஜ் நீக்கம்

இதேபோல் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா நமீபியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார். இதனால் முகமது சிராஜ் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மேட்ச் வின்னராக ஜொலித்து இருந்தாலும், அர்ஷ்தீப் சிங் தொடர்ந்து நல்ல நிலையில் பந்து வீசி வருவதால் சிராஜ் நீக்கப்படவே வாய்ப்புகள் இருக்கின்றன.

44
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
Image Credit : Getty

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

அடுத்ததாக காயம் காரணமாக இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடாத தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் கம்பேக் கொடுக்கிறார் என்று சூர்யகுமார் ஏற்கெனவே தெரிவித்து விட்டார். இதனால் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்பட உள்ளார்.

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image2
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Recommended image3
IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை: அதிக ரன்களை சேஸ் செய்து அசத்திய நியூசிலாந்து.. கிளென் பிலிப்ஸ் புதிய மைல்கல்!
Recommended image2
T20 உலகக்கோப்பை: மும்பை காவல்துறையால் கைதான USA வீரர்.. வைரலாகும் ஹர்மீத் சிங்கின் பழைய கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved