MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!

18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!

Samsaptak Yog : 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் மற்றும் கேது உருவாக்கும் சம சப்தக யோகம் மார்ச் மாதத்தில் நிகழ்கிறது. இது சில ராசிகளுக்கு நிறைய நன்மைகளைத் தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 20 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சம சப்தக யோகம் 2026
Image Credit : Asianet News

சம சப்தக யோகம் 2026

கிரகங்களின் ராஜாவான சூரியன், மார்ச் 15, 2026 அன்று காலை 1:08 மணிக்கு மீன ராசியில் சஞ்சரித்து, ஏப்ரல் 14, 2026 செவ்வாய்க்கிழமை காலை 9:38 மணி வரை அங்கேயே இருப்பார். இந்த நேரத்தில், அவர் கேதுவுடன் சம சப்தக யோகத்தை உருவாக்குகிறார். 

இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஏழாவது வீட்டில் 180 டிகிரி கோணத்தில் அமைந்து, ஒருவரையொருவர் முழுப் பார்வையில் பார்க்கும்போது சம சப்தக யோகம் உருவாகிறது. கேது கன்னியிலும், சூரியன் மீனத்திலும் இருப்பார்கள். இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சம சப்தக யோகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குருவும் சாதகமாக இருப்பதால், உங்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். இந்த ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால், தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆற்றல் நிறைந்தவராக, அதிக உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

Related Articles

Related image1
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்.! மார்ச் மாதம் அதிக பாதிக்கப்புள்ளாகும் 3 ராசிகள் இவர்கள் தான்.!
Related image2
சுக்கிரன்-செவ்வாய் சிறப்பு சேர்க்கையால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.!
34
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் இருப்பார். எனவே, இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும். தொழில் ரீதியாக இந்த நேரம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்கள் போட்டியாளர்களை வெல்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

44
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் உருவாகும் சம சப்தக யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் நன்மை தரும். இவர்கள் தொழில் துறையில் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய அந்தஸ்து கிடைக்கலாம். சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பணம் தேடி வரும்... பதவி உயர்வு நிச்சயம்! - புதன் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த 4 ராசிகள்!
Recommended image2
Dwidwadash Yoga 2026 : ஏப்ரலில் 5 முறை உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! ஒரே இரவில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Recommended image3
Tamil Puthandu 2026 : தமிழ் புத்தாண்டில் மேஷத்தில் உருவாகும் குபேர யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு லட்சாதிபதியாகும் யோகம் கிடைக்கும்.!
Related Stories
Recommended image1
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்.! மார்ச் மாதம் அதிக பாதிக்கப்புள்ளாகும் 3 ராசிகள் இவர்கள் தான்.!
Recommended image2
சுக்கிரன்-செவ்வாய் சிறப்பு சேர்க்கையால் கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved