MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!

Astrology: ஜூன் 8 முதல் இவர்களின் தலைவிதி மாறப்போகுது! சொல்லி அடிக்கும் கில்லியாக மாறப்போகும் 4 ராசிகள்!

ஜூன் 8 முதல் ஜூலை 4 வரை, சுக்கிரன் கடக ராசியில் குருவுடன் இணைந்து 'கஜலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இந்த அபூர்வ கிரக சேர்க்கையால், மேஷம் உள்ளிட்ட 4 ராசிகள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் அசுர வளர்ச்சியைப் பெறும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 05 2026, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கஜலட்சுமி ராஜயோகம்
Image Credit : Gemini AI

கஜலட்சுமி ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் அன்பின் காரணியாக விளங்குபவர் சுக்கிரன் பகவான். சுக்கிரன் ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றி வருகிறது. அந்த வகையில் ஜூன் 8ம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். ஏற்கனவே கடக ராசியில் சுப கிரகமான குரு பகவான் அமர்ந்திருப்பதால், ஜூன் 8 முதல் ஜூலை 4 வரை 'கஜலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. 2026 ஜூன் மாதத்தில் நிகழும் இந்த அபூர்வ கிரக சேர்க்கையால், அடுத்த ஒரு மாத காலத்திற்குத் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலைமையில் அசுர வளர்ச்சியைப் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் மற்றும் அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம் - மங்களகரமான யோகம்
Image Credit : Pixabay

மேஷம் - மங்களகரமான யோகம்

மேஷ ராசிக்கு 4-வது இடத்தில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நீண்ட நாள் கனவான புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் புதிய வாய்ப்புகளை காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, வெளிநாடு செல்லும் கனவும் நனவாகும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று அரிசி, சர்க்கரை போன்ற வெள்ளை நிறப் பொருட்களைத் தானம் செய்தால் நல்லது.

Astrology: இனி இவங்களுக்கு ராஜயோகம்! புதன் நட்சத்திரப் பெயர்ச்சியால் அடுத்த 10 நாட்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் 5 ராசிகள் எவை?

Related Articles

Related image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Related image2
Astrology: உங்க ராசிக்கு எந்த டாட்டூ டிசைன் லக்கி தெரியுமா? இதோ 12 ராசிகளுக்கான லிஸ்ட்!
35
மிதுனம் - செல்வச் செழிப்பு
Image Credit : Pixabay

மிதுனம் - செல்வச் செழிப்பு

மிதுன ராசிக்கு 2-ம் வீடான செல்வ ஸ்தானத்தில் கஜலட்சுமி யோகம் அமைவதால், பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. புதிய லாப வழிகள் உருவாகி வருமானம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் தொடங்க இதுவே மிகச் சிறந்த காலகட்டம். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும், சமூகத்தில் மரியாதை கூடும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நிதி நெருக்கடி தீர வெள்ளிக்கிழமை அன்று இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.

45
கடகம் - அதிர்ஷ்டத்தின் உச்சம்
Image Credit : Pixabay

கடகம் - அதிர்ஷ்டத்தின் உச்சம்

சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால், கஜலட்சுமி யோகத்தின் முழுப் பலன்களையும் நீங்களே அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களை நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நிதிப் பிரச்சினைகள் மற்றும் கடன்கள் முற்றிலும் தீரும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் நல்ல வரன் அமையும். உங்கள் உடம்பில் முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்

செல்வ வளம் பெருகவும், லட்சுமி தேவியின் அருளைப் பெறவும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

55
விருச்சிகம் - பொன்னான காலம்
Image Credit : Pixabay

விருச்சிகம் - பொன்னான காலம்

விருச்சிக ராசிக்கு 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆவதால், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். நிதி நிலைமை படிப்படியாக அசுர வளர்ச்சி அடையும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வேலை இல்லாமல் திண்டாடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும், புதிய பொறுப்புகளும் தேடி வரும். மாணவர்கள் உயர்கல்வியில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவோடு குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்

தினமும் 108 முறை 'ஓம் சூன் சுக்ரய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அரிசி, தயிர் அல்லது சர்க்கரை தானம் வழங்கவும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராசி பலன்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: ஜூன் மாத கிரகப் பெயர்ச்சி! அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!
Recommended image2
Astrology: அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன்! குரு பார்வையும் சேர்வதால் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பணமெத்தையில் தூங்க போகும் ராசிகள்.!
Recommended image3
Numerology: உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்
Related Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Astrology: உங்க ராசிக்கு எந்த டாட்டூ டிசைன் லக்கி தெரியுமா? இதோ 12 ராசிகளுக்கான லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved