MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: உங்க ராசிக்கு எந்த டாட்டூ டிசைன் லக்கி தெரியுமா? இதோ 12 ராசிகளுக்கான லிஸ்ட்!

Astrology: உங்க ராசிக்கு எந்த டாட்டூ டிசைன் லக்கி தெரியுமா? இதோ 12 ராசிகளுக்கான லிஸ்ட்!

Zodiac Tattoo Ideas: ராசிக்கு எந்த மாதிரியான டாட்டூ போடலாம். உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை தருமா? வாழ்க்கையில இருக்கின்ற பிரச்சனைகள் குறையுமா? எந்த ராசிக்காரங்களுக்கு எந்த மாதிரி டாட்டூ போடலாம்? இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்? 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 02 2026, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
12 ராசிகளுக்கான டாட்டூ
Image Credit : Asianet News

12 ராசிகளுக்கான டாட்டூ

இன்றைய தலைமுறையினரிடம் டாட்டூ குத்திக் கொள்ளும் ஆர்வம் ஆண்கள் முதல் பெண்கள் என அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. டாட்டூ என்பது வெறும் ஸ்டைல் மட்டுமல்ல, அது ஒருவருடைய ஆளுமையின் வெளிப்பாடு. ஜோதிட சாஸ்திரத்தின்படி, நாம் உடலில் குத்திக் கொள்ளும் சின்னங்கள் நம் எண்ண அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் எந்த டாட்டூ டிசைன்கள் அதிர்ஷ்டமானவை என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

நெருப்பு தத்துவத்தைக் கொண்ட மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். செம்மறி ஆடு, நெருப்பு ஜூவாலை, வாள், அம்பு அல்லது போர்வீரன் போன்ற கம்பீரமான டிசைன்கள் இவர்களின் தைரியத்தை பிரதிபலிக்கும். ஆகையால் இது மாதிரியான டாட்டூக்களை போட்டுக்கொள்ளலாம்.

Related Articles

Related image1
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Related image2
Astrology: ஜன்ம ராசியை பார்க்கும் குரு பகவான்! 3 ராசிகளுக்கு அந்தஸ்து, மதிப்பு உயருமாம்! ஜூனில் வெற லெவல் வளர்ச்சி காத்திருக்கிறது!
313
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷபத்தின் அதிபதி ஆடம்பர நாயகன் சுக்கிரன். காளை, ரோஜா, தாமரை மலர்கள் மற்றும் காடு, மலை போன்ற இயற்கை சார்ந்த அழகிய டிசைன்கள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

413
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுனத்தின் அதிபதி புதன் பகவான். இரட்டையர்கள், வண்ணத்துப் பூச்சி, பறவைகளின் இறகுகள் மற்றும் புதன் கிரகம் சார்ந்த சின்னங்கள் இவர்களின் புத்தி கூர்மையைக் காட்டும். ஆகையால் இவற்றை டாட்டூக்களைப் போட்டுக்கொள்ளலாம்.

513
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடகத்தின் அதிபதி மனோகாரகன் சந்திரன். சந்திரன், நண்டு, கடல் அலைகள் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் குறியீடுகள் இவர்களுக்கு மன அமைதியைத் தரும். ஆகையால் இவற்றை டாட்டூக்களாகப் போட்டுக்கொள்ளலாம்.

613
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்மத்தின் அதிபதி கிரகங்களின் அரசனான சூரியன். காட்டின் ராஜா சிங்கம், பிரகாசிக்கும் சூரியன், கிரீடம் மற்றும் ராஜ வம்சத்து சின்னங்கள் ஆகியவை பிரபலமான டாட்டூக்கள்.

713
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னியின் அதிபதி புதன் பகவான். இவர்களுக்கு நேர்த்தியான டிசைன்கள் பிடிக்கும். மென்மையான பூக்கள், இலைகள், பெண் தெய்வ வடிவங்கள் மற்றும் எளிய வடிவியல் டிசைன்கள் இவர்களுக்குப் பொருத்தமானவை.

813
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவர்கள் எப்போதும் சமநிலையை விரும்புபவர்கள். தராசு, நீதி மற்றும் சமநிலையை உணர்த்தும் கலைநயமிக்க டாட்டூக்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.

913
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் பகவான். தேள், சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை, பாம்பு மற்றும் ரகசிய குறியீடுகள் இவர்களின் ஆளுமைக்குச் செட் ஆகும். இவைகளை டாட்டூக்களாக போட்டுகொள்ளலாம்.

1013
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

நெருப்பு ராசியான தனுசின் அதிபதி தேவகுரு வியாழன். இவர்களுக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். வில்-அம்பு, குதிரை மற்றும் உலக வரைபடம் போன்ற பயணம் சார்ந்த டாட்டூக்கள் நல்ல பலன்களைத் தரும்.

1113
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

நில ராசியான மகரத்தின் அதிபதி கர்மகாரகன் சனி பகவான். இவர்கள் கடின உழைப்பாளிகள். உயர்ந்த மலைகள், கடல் ஆடு மற்றும் வெற்றியைக் குறிக்கும் சின்னங்கள் இவர்களின் லட்சியத்தை எட்ட உதவும்.

1213
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

காற்று ராசியான கும்பத்தின் அதிபதி சனி பகவான். இவர்கள் தனித்துவமான சிந்தனை உடையவர்கள். நீரோடை, விண்மீன்கள், பிரபஞ்சக் கோள்கள் மற்றும் விசித்திரமான ஜியோமெட்ரிக் டிசைன்கள் இவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

1313
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீனத்தின் அதிபதி குரு பகவான். இவர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இரண்டு மீன்கள் இணைந்து இருப்பது போன்ற டிசைன், அலைகடல், தாமரை மற்றும் ஓம், சிலுவை போன்ற ஆன்மீகச் சின்னங்கள் இவர்களுக்குப் பேரதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Recommended image2
Astrology: பிரச்சினைகளை தீர்க்கும் குருபெயர்ச்சி பரிகாரங்கள்.! எந்த ராசியினர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Recommended image3
Marriage Luck Zodiac Signs : இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதல், ஹனிமூன், திருமண யோகம் அடிக்குது.. 4 கிரக சேர்க்கை அதிரடி
Related Stories
Recommended image1
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Recommended image2
Astrology: ஜன்ம ராசியை பார்க்கும் குரு பகவான்! 3 ராசிகளுக்கு அந்தஸ்து, மதிப்பு உயருமாம்! ஜூனில் வெற லெவல் வளர்ச்சி காத்திருக்கிறது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved